என் மலர்
உள்ளூர் செய்திகள்

தென்காசி அரசு தலைமை மருத்துவமனையில் விபத்தில் சிக்கியவருக்கு 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை
- மோகன் என்பவர் விபத்தில் சிக்கி அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது.
- மருத்துவகுழுவினர் 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்தனர்.
தென்காசி:
தென்காசி அருகே உள்ள அய்யாபுரம் பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த மோகன் (வயது 58) என்பவர் விபத்தில் சிக்கியதில் அவரது இடது காலில் முறிவு ஏற்பட்டது.
தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் ஆலோசனையின் படி இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் அறுவை சிகிச்சை செய்ய டாக்டர்கள் ராம் சுந்தர், ராமர் அனைத்து ஏற்பாடுகளும் செய்தனர்.
பின்னர் மருத்துவமனை கண்காணிப்பாளர் ஜெஸ்லின் தலைமையில் எலும்பு முறிவு மருத்துவர் ராம் சுந்தர், மயக்க மருத்து வர் அகமது பீவி, அறுவை அரங்க செவிலியர் மல்லிகா, அரங்க உதவியாளர்கள் அருணாச்சலம், பிரபாகரன் குழு 3 மணி நேரத்தில் அறுவை சிகிச்சை செய்து காப்பாற்றினர்.
உறைவிட மருத்துவர் எஸ்.எஸ். ராஜேஷ் துரித கதியில் செயல்பட்டு அறுவை சிகிச்சைக்கு தேவைப்பட்ட கம்பிகளை ஒரு மணி நேரத்தில் வரவழைத்து அறுவை சிகிச்சை விரைவில் நடத்த உதவினார்.
இதுகுறித்து முதன்மை மருத்துவர் ஜெஸ்லின் கூறுகையில், தென்காசி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை மருத்து வர்கள்,மற்றும் பணியா ளர்கள் அனைவரும் சேவை மனப்பான்மை யோடு பணி புரிந்து வருகிறார்கள். தனியார் மருத்துவமனைகளுக்கு இணையாக தென்காசி மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தது பெரிய சாதனை.
தென்காசி மருத்துவ மனை மருத்துவர்களும், செவிலியர்களும் அவசர சிகிச்சை பிரிவில் அதிக கவனம் செலுத்தி அப்பிரிவை மேலும் மேம்படுத்தி, தென்காசியில் இருந்து நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு பரிந்துரை செய்யும் நோயாளிகளின் எண்ணிக்கையை பூஜ்ஜியமாக்க ஒத்துழைக்க வேண்டும் என்றார்.






