search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை
    X

    பேச்சிப்பாறை அணையில் உபரி நீர் திறப்பு: திற்பரப்பு அருவியில் குளிக்க தடை

    • அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.
    • திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.

    திருவட்டார்:

    குமரி மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது. கடந்த 2 நாட்களாக மழை பெய்யாத நிலையிலும் அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகமாகவே உள்ளது.

    பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 772 கன அடி தண்ணீர் வரும் நிலையில் மதகுகள் வழியாக 478 கனஅடியும், உபரி நீராக 378 கன அடியும் திறந்து விடப்படுகிறது. இதன் காரணமாக கோதையாறு ஆற்றில் தண்ணீர் அதிகமாக செல்கிறது.

    இதன் காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து பாதுகாப்பு நடவடிக்கையாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க நேற்று மாலை தடை விதிக்கப்பட்டது.

    இன்று காலையும் அருவியில் தண்ணீர் அதிகமாக கொட்டுவதால் குளிக்க தடை நீடிக்கப்பட்டு உள்ளது. இதனால் அங்கு ஆனந்த நீராட வந்த பலரும் ஏமாற்றம் அடைந்தனர்.

    பேச்சிப்பாறை அணை பகுதியில் நேற்று சாரல் மழை பெய்தது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையின் நீர்மட்டம் 44.46 அடியாக உள்ளது. 77 அடி கொள்ளளவு கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 69.2 அடியாக உள்ளது. இந்த அணைக்கு விநாடிக்கு 625 கன அடி தண்ணீர் வநம் சூழலில் 460 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது.

    Next Story
    ×