என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை ரெயில் நிலையத்தில் நடைபெற்று வரும் மேம்பாட்டு பணிகள் ஆய்வு
- முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
- தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும்.
தஞ்சாவூர்:
இந்தியா முழுவதும் முதல் கட்டமாக 508 ரெயில் நிலையங்கள் அம்ரித் பாரத் நிலையம் திட்டத்தின் கீழ் ரூ.24 ஆயிரத்து 470 கோடியில் மேம்படுத்தப்படுகிறது. இதில் தெற்கு ரெயில்வே நிலையங்களில் உள்ள 25 ரெயில் நிலையங்களும் அடங்கும்.
அதன்படி, தமிழகத்தில் முதல்கட்டமாக தஞ்சாவூர், மயிலாடுதுறை, செங்கல்பட்டு, உள்ளிட்ட 18 ரெயில் நிலையங்கள், புதுச்சேரி ரெயில் நிலையம், கர்நாடகா மாநிலத்தில் மங்களூரு உள்ளிட்ட பல்வேறு ரெயில் நிலையங்கள் முதல் கட்டமாக ரூ.616 கோடியில் மேம்படுத்தப்பட உள்ளது.
இந்நிலையில், இந்த ரெயில் நிலையங்கள் நவீன முறையில் மேம்படுத்தும் திட்ட பணிகளை எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., மாவட்ட கலெக்டர் தீபக் ஜேக்கப் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
பின்னர் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., கூறியதாவது:-
தஞ்சாவூர் ரெயில் நிலையம் முழுவதும் மேற்கூரை அமைக்கப்படும். லிப்ட் மட்டும் எக்ஸ்லேட்டர் வசதி 5 நடைமுறைக்கு செல்ல கூடிய அளவில் புணரமைக்கப்படும். நடைமேடைகள் புதுப்பிக்கப்படும். போக்குவரத்து நெரிசலை போக்கும் வகையில் ரெயில் நிலையத்தின் வெளிப்புறம் சாலை புதிதாக அமைக்கப்படும் என்றார்.
ஆய்வின் போது கோட்டாட்சியர் இலக்கியா, ரெயில்வே அதிகாரிகள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், தாசில்தார் உள்ளிட்ட உடன் இருந்தனர்.