search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக  சுசான்லி டாக்டர் ரவி நியமனம்
    X

    கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் தலைவராக சுசான்லி டாக்டர் ரவி,உயர்மட்டக் குழு தலைவராக பேராசிரியை டாக்டர் உஷாரவி ஆகியோர்களுக்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தனர்.

    கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக சுசான்லி டாக்டர் ரவி நியமனம்

    • கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் 25 வது ஆண்டு தலைவராக சுசான்லி டாக்டர் ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
    • பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது.

    கடலூர்:

    புதுச்சேரியை தலைமையிடமாக கொண்டு செயல்படும் கவுன்சில் ஆப் இண்டியன் அக்குபஞ்சரிஸ்ட்ஸ் ரிசர்ச் சென்டரின் 25 ம் ஆண்டு தொடக்க விழா மற்றும் பொதுக்குழு கூட்டம், புதிய நிர்வாகிகள் தேர்வு என முப்பெரும் விழா கடலூரில் நடைபெற்றது. விழாவிற்கு தி சுசான்லி குழுமத்தின் சேர்மனும், கவுன்சிலின் நிறுவனத் தலைவருமான டாக்டர் ரவி தலைமை தாங்கினார். இதில் 25-ம் ஆண்டின் தலைவராக தி சுசான்லி குரூப்ஸின் சேர்மன் டாக்டர் ரவி மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    செயலாளராக ராஜலிங்கம் , பொருளாள ராக அனந்தகிருஷ்ணன், உதவி தலைவராக மனோஜ், இணைபொருளாளராக கிருஷ்ணசிவசலபதி, இணை செயலாளர்களாக சுந்தரமூர்த்தி மற்றும் நெல்லை ஆசுகவிநவநீதகிருஷ்ணன் மற்றும் செயற்குழு உறுப்பினர்களாக புகழேந்தி, பீலிப்ராஜ்ரவி, சாராதாஸ்ரீ, சுகன்யா, அசோக்ராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

    பேராசிரியை டாக்டர் உஷாரவி " பிரைன் ஃபாக் " என்ற டிங் ஜாங் புராஜக்ட் 2-வது முறையாக தொடங்கினார். புதிய நிர்வாகிகள் பொறுப்பு பெற்றவுடன் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மண்டல தலைவர்கள், மண்டல உதவி தலைவர்கள் மற்றும் உயர்மட்டக்குழு ஆகியவற்றை டாக்டர் ரவி அறிவித்தார். உயர்மட்டக் குழுவின் தலைவராக தி சுசான்லி குழும இணை இயக்குனர் பேராசிரியை டாக்டர் உஷாரவி , இணை தலைவராக அறிவழகன் மற்றும் உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள்.

    அரசு அக்குபஞ்சர் நிபுணர்களுக்கென தனி கவுன்சில் அமைக்க வேண்டும் மற்றும் அரசு மாவட்ட மருத்துவமனைகள் உள்ளிட்ட அனைத்திலும் அக்குபஞ்சர் தெரபிஸ்ட்களை நியமிக்க வேண்டும். அக்குபஞ்சர் அறிவியல் ஆய்விற்கென தனிநிதி ஒதுக்க வேண்டும். பட்டம், பட்டயம் போன்ற அக்குபஞ்சர் பயிற்சியினை அரசு கல்லூரிகளில் துவக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டது. இதில் 300 க்கும் மேற்பட்ட அக்குபஞ்சர் நிபுணர்கள் பங்கேற்றனர். முடிவில் அனந்தகிருஷ்ணன் நன்றி கூறினார்.

    Next Story
    ×