search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டும்
    X

    தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற கூட்டம் நடந்த போது எடுத்த படம்.

    புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முதலிடம் வழங்க வேண்டும்

    • தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் கூட்டத்தில் புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும்.
    • தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் தீர்மானம்

    ராசிபுரம்:

    தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் மன்றம் வெண்ணந்தூர் ஒன்றிய கிளையின் கூட்டம், வெள்ளை பிள்ளையார் கோவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் நடந்தது.

    இந்தக் கூட்டத்தில் வெண்ணந்தூர் ஒன்றிய கிளை நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. மோகன் மற்றும் பேபி ஆகியோர் தேர்தல் ஆணையாளர்களாக இருந்து தேர்தலை நடத்தினர். இதில் ஜெகநாதன் ஒன்றிய செயலாளராகவும், மனோ கரன் தலைவராகவும், சுப்பிரமணியம் பொருளாளராகவும், மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்களாக கந்தசாமி, இளங்கோ, கோவிந்தராஜ் ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். மூத்தோர் அணி அமைப்பா ளர்களாக சண்முகம் மற்றும் விஜயகுமார் தேர்வு செய்யப்பட்டனர்.

    கூட்டத்தில் மாநில பொருளாளர் முருக செல்வ ராசன், மாநில இலக்கிய அணி துணை அமைப்பாளர் ராமச்சந்திரன், மாவட்ட செயலாளர் சங்கர், மாவட்ட தணிக்கை குழு உறுப்பினர் தண்டபாணி ஆகியோர் பேசினர்.

    இதில், புதிய ஓய்வு திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். புதிய கல்விக் கொள்கையில் தமிழ் மொழிக்கு முதலிடம் கொடுக்க வேண்டும். ஆசிரி யர்கள் வருங்கால வைப்பு நிதியில் இருந்து கடன் பெறும் நடைமுறை வட்டார கல்வி அலுவலர் இடமே இருக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இறுதியில் ஒன்றிய பொருளாளர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    Next Story
    ×