search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பண்ருட்டியில்  தமிழக கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு
    X

    பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் ஆய்வு மேற்கொண்ட போது எடுத்த படம்.

    பண்ருட்டியில் தமிழக கூடுதல் தலைமை செயலாளர் ஆய்வு

    • மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார்.
    • குமார் ஜெயிந்த் ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார்.

    கடலூர்:

    கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆய்வுக்காக தமிழ்நாடு முதல்-அமைச்சர் நேற்று விழுப்புரத்திற்கு வருகை தந்தார். அவருடன் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் வந்திருந்தனர். மாவட்ட அளவிலான ஆய்வு பணிகளில் முதல்வர் ஈடுபட்டார். வட்ட அளவிலான ஆய்வு பணிகளில் தலைமைச் செயலக கூடுதல் செயலாளர்கள் மேற்கொண்டனர். பண்ருட்டி வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய்த்துறை கூடுதல் தலைமை செயலாளர் குமார் ஜெயிந்த் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.

    ஆய்வின் போது பட்டா மாற்றம், இ-சேவை மையம், சர்டிபிகேட் வழங்கும் பணி ஆகியவைகளை ஆய்வு செய்து அதிகாரிகளை பாராட்டினார். ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் பூவராகவன், கடலூர் கோட்டாச்சியர்அதியமான் கவியரசு, நில அளவை பதிவேடு துறை உதவி இயக்குனர் திருநாவுக்கரசு, தொடர்பு அலுவலர் தாசில்தார் பூபால சந்திரன், பண்ருட்டி தாசில்தார் ஆனந்தி, துணை தாசிலார்கள் சிவகுமார், கிருஷ்ணா கவுரி, தேவநாதன் ஆகியோர் இருந்தனர்.

    Next Story
    ×