search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வட மாநிலங்களில் இல்லாத சலுகைகள், திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளன- பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
    X

    பொங்கல் விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு அமைச்சர் கீதாஜீவன் பரிசு வழங்கிய காட்சி. அருகில் மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளார்.

    வட மாநிலங்களில் இல்லாத சலுகைகள், திட்டங்கள் தமிழ்நாட்டில் உள்ளன- பொங்கல் விழாவில் அமைச்சர் கீதாஜீவன் பேச்சு

    • அமைச்சர் கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர்.
    • வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள், திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.

    தூத்துக்குடி:

    தூத்துக்குடியில் பொங்கல் திருநாளை யொட்டி 30-வது வட்ட தி.மு.க. மற்றும் டூவிபுரம் இளைஞர் அணி சார்பில் 20-ம் ஆண்டு பொங்கல் விழா நிகழ்ச்சி டூவிபுரம் 10-வது தெருவில் நடைபெற்றது.

    அண்ணாநகர் பகுதி செயலாளர் ரவீந்திரன் தலைமை தாங்கினார். கவுன்சிலர் அதிஷ்டமணி, நிர்வாகிகள் ராஜ்மோகன், கார்த்திகேயன், அந்தோணிராஜ், அன்பழகன், நாராயணராஜ், சுப்பிரமணியன், கணேசன், சபேசன், சந்திரசேகர், தங்ககுமார், சீனிவாசன், செல்வராஜ், சின்ராஜ், அன்னராஜன், டேனியல், ஜெயராமன், ரவிக்குமார், சத்யநாராயணன், ராஜ்நாராயணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சேக் உமர் வரவேற்றார்.

    வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் சமூகநலன் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினர். பின்னர் அமைச்சர் கீதாஜிவன் பேசியதாவது:-

    இந்தியாவில் உள்ள மாநிலங்களில் பெரிய மாநிலம் தமிழ்நாடு. பொருளாதார வளர்ச்சி என பல முன்னேற்றப்பாதையில் சென்றுள்ளதை ஒன்றிய அரசே கூறியுள்ளது.

    அ.தி.மு.க.வில் 2 பேரும் தன்னை காப்பாற்றிக் கொள்வதில் தான் குறியாக உள்ளனர். தமிழ்மொழி, கலாசாரம் போன்ற பல்வேறு வளர்ச்சியடைந்துள்ள காரணத்தால் ஒன்றிய நமது அரசு நமக்கு கொடுக்க வேண்டிய நிதிகளை குறைத்து கொண்டே வருகிறது.

    நம்முடைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிர்வாக திறமையால் அதையும் சமாளித்து பணியாற்றி வருகிறார். பெருந்தலைவர் காமராஜர், பெரியார், அண்ணா, கலைஞர் ஆகியோரின் லட்சிய வழியில் முதல்-அமைச்சர் பணியாற்றி கொண்டிருக்கிறார்.

    தமிழ்நாடு என்ற பிரச்சனையை சிலர் கிளப்பினார்கள். தமிழ்நாடு என்ற பெயர் வருவதற்கு 76 நாட்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த சங்கரலிங்க நாடார் தியாகத்தை நாம் போற்றுவோம்.

    வட மாநிலங்களில் இல்லாத பல சலுகைகள் திட்டங்கள் தமிழகத்தில் உள்ளன. திராவிட மாடல் ஆட்சிக்கு அனைவரும் துணை நிற்க வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், துணைச்செயலாளர் கனகராஜ், மாநில பேச்சாளர் சரத்பாலா, மாநகர அணி துணை அமைப்பாளர் சிவக்குமார் என்ற செல்வின், மாவட்ட பிரதிநிதி செந்தில்குமார், கவுன்சிலர் பொன்னப்பன், வட்டச் செயலாளர்கள் பொன்னுச்சாமி, பாலு மற்றும் கருணா, அல்பட், கிளிப்ராஜன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டச்செயலாளர் செந்தில்குமார் நன்றி கூறினார்.

    Next Story
    ×