search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    இந்தியாவிலேயே சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு
    X

    முகாமில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மாணவர் ஒருவருக்கு நலத்திட்ட உதவி வழங்கிய போது எடுத்த படம். அருகில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. மற்றும் பலர் உள்ளனர்.

    இந்தியாவிலேயே சுகாதார திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது - அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு

    • உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைபள்ளியில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.
    • மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு வருமுன் காப்போம், காப்பீட்டு திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என அமைச்சர் அனிதாராதாகிருஷ்ணன் பேசினார்.

    உடன்குடி:

    முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழாவையொட்டி மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பன்னோக்கு சிறப்பு மருத்துவ முகாம் உடன்குடி டி.டி.டி.ஏ. மேல்நிலைபள்ளியில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தலைமையில் நடைபெற்றது.

    தூத்துக்குடி சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பொற்செல்வன் வரவேற்றார். தமிழக மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதா கிருஷ்ணன் பங்கேற்று முகாமை குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்து பேசியதாவது:-

    இந்திய அளவில் சுகாதாரம் மிக்க மாநிலங்களில் தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்கிறது.நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழிக்கேற்ப முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு வருமுன் காப்போம், காப்பீட்டு திட்டங்கள், மக்களைத் தேடி மருத்துவம் உள்பட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார்.

    இந்தியாவிலேயே சுகாதாரத் திட்டங்களை செயல்படுத்துவதில் தமிழகம் மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாகவும், முதன்மையாகவும் திகழ்வ தாக மத்திய அரசின் சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா, தேசிய சுகாதார இணைய தலைமை அதிகாரிகள் ஆகியோர் பாராட்டி உள்ளனர்.

    இந்த முகாமில் அனைத்து தரப்பு நோய்களுக்கும் உயர்ந்த தரத்தில் மருத்து பரிசோதனைகள், சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. மக்கள் இதனை பயன்படுத்தி நலமான ஆரோக்கியமான, வாழ்வை அமைத்துக்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அமைச்சர் பேசினார்.

    நிகழ்ச்சியில் மாவட்ட கூடுதல் கலெக்டர் தாக்கரே சுபம் ஞானதேவ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ., தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி முதல்வர் சிவக் குமார், மாவட்ட மருத்துவ பணிகள் இணை இயக்குநர் கற்பகம், துணை இயக்குநர்கள் சுந்தரலிங்கம், யமுனா, திருச்செந்தூர்

    ஆர்.டி.ஓ. குருசந்திரன், தாசில்தார் வாமனன், சுகாதார பணிகள் தொழில்நுட்ப நேர்முக உதவியாளர் மதுரம் பிரைட்டன், உடன்குடி ஊராட்சி ஓன்றியக்குழு தலைவர் பாலசிங், துணைத்தலைவி மீரா சிராஜூதீன், உடன்குடி பேரூராட்சி தலைவி ஹூமைரா அஸ்ஸாப், துணைத்தலைவர் மால் ராஜேஷ், உடன்குடி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜான்சிராணி, பழனிச்சாமி ,பேரூராட்சி நியமனக்குழு தலைவர் ஜான்பாஸ்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    தி.மு.க. மாநில வர்த்தக அணி இணை செயலர் உமரிசங்கர், விளையாட்டு மேம்பாட்டு அணி துணை அமைப்பாளர் பாக்கியராஜ், உடன்குடி கிழக்கு ஓன்றிய தி.மு.க. செயலர் க.இளங்கோ, உடன்குடி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் அஸ்ஸாப், செட்டியாபத்து உராட்சி மன்றத் தலைவர் பாலமுருகன், திருச்செந்தூர் நகராட்சி துணைத்தலைவர் ரமேஷ், உடன்குடி வட்டார காங்கிரஸ் தலைவர் துரைராஜ் ஜோசப், தொகுதி இளைஞர் காங்கிரஸ் தலைவர் தனீஷ், மாவட்ட பிரதிநிதி மதன்ராஜ், மாவட்ட நெசவாளர் அணி அமைப்பாளர் மகா விஷ்ணு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சிந்தியா, மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் செல்வகுமார், ஜெசிபொன்ராணி, பள்ளி தலைமை ஆசிரியர் லிவிங்ஸ்டன் மற்றும்

    உள்ளாட்சி பிரதிநிதிகள், தி.மு.க., காங்கிரஸ் நிர்வாகிகள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×