என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உயர் கல்வியில் 5 ஆண்டுகளில் தமிழகம் 100 சதவீதத்தை எட்டும் -அமைச்சர் சிவசங்கர்
- இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
- வேலைவாய்ப்பு வழங்குவதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் அயல்நாட்டுக் கல்வித் துறை சார்பில் தென்னை விஞ்ஞானி டாக்டர் செல்வம் அறக்கட்ட ளையின் முதலாமாண்டு விழா நடைபெற்றது.
துணைவேந்தர் திருவள்ளுவன் தலைமை வகித்தார்.
இந்த விழாவில் போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் கலந்து கொண்டு பேசியதாவது:-கல்வியில் நமது மாணவர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காகத் முதல்-அமைச்சர் அளித்து வருகிற சலுகைகள், திட்டங்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தமிழகத்தை மிகச் சிறந்த மாநிலமாகக் கொண்டு செல்லும்.
இந்திய ஒன்றியத்தில் கல்வியில் மிகச் சிறந்த மாநிலமாக தமிழகம் உள்ளது.
இந்திய ஒன்றிய அரசு உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணிக்கையை 51 சதவீதமாக உயர்த்த வேண்டும் என இலக்கு நிர்ணயித்தது.
மற்ற மாநிலங்களில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் 26 சதவீதமாக இருந்ததே இதற்குக் காரணம். ஆனால், தமிழகத்தில் உயர் கல்வி பெறுபவர்களின் விகிதம் ஏற்கனவே 52 சதவீதமாக உயர்ந்துள்ளது. எனவே, தமிழகத்தில் இன்னும் 5 ஆண்டுகளில் உயர் கல்வி பெறுபவர்களின் எண்ணி க்கை நிச்சயமாக 100 சதவீதத்தை எட்டும்.
முதல்-அமைச்சர் அறிவித்த புதுமைப் பெண் திட்டத்தின் மூலம், தமிழகத்திலுள்ள பெண் குழந்தைகள் நிச்சயமாக கல்லூரிக் கல்வியை முடிப்பர்.
பெண் குழந்தைகள் படிப்பதால், அந்தக் கட்டாயத்தின் காரணமாக ஆண் குழந்தைகளும் உயர் கல்வி படிக்கும் சூழல் ஏற்படும்.
இதன் மூலம், 5 ஆண்டுகளில் தமிழகம் 100 சதவீத உயர் கல்வியைப் பெற்றிருக்கும்.
இதேபோல, வேலைவாய்ப்பு வழங்கு வதற்கும் முதல்-அமைச்சர் பல்வேறு திட்டங்களையும் வழங்கி வருகிறார் .இவ்வாறு அவர் பேசினார்.