என் மலர்
உள்ளூர் செய்திகள்
வாணியம்பாடி கோவில் விழாவில் பேனர் வைப்பதில் தகராறு- பா.ஜ.க. பிரமுகருக்கு கத்தி குத்து
- கோவில் விழாவில் தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர்.
- அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வாணியம்பாடி:
வாணியம்பாடி நியூ டவுன் பகுதியில் மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா நடந்து வருகிறது. நேற்று மாரியம்மன் கோவில் அருகே நடன நிகழ்ச்சி நடைபெற்றது.
இதற்காக தி.மு.க.வினரும் பா.ஜ.க.வினரும் பேனர் வைத்துக் கொண்டிருந்தனர். அப்போது இரு கட்சியினர் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த தி.மு.க.வை சேர்ந்த ஒருவர் பா.ஜ.க.வை சேர்ந்த ஜனார்த்தனன் (வயது 26) என்பவரை சரமாரியாக கத்தியால் வெட்டினார். இதில் ஜனார்த்தனன் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் சரிந்தார். ஜனார்த்தனனை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பா.ஜ.க.வை சேர்ந்தவர்கள் வாணியம்பாடி டவுன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். குற்றவாளிகளை கைது செய்யக்கோரி வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.