என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
திண்டுக்கல் தி.மு.க. நிர்வாகி கொலை: அருப்புக்கோட்டை கோர்ட்டில் 8 பேர் சரண்
- காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சரவணனை ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
- திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர்.
அருப்புக்கோட்டை:
திண்டுக்கல் தீப்பாச்சி அம்மன் கோவில் அருகே உள்ள கொல்லம் பட்டறை பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் திண்டுக்கல் மாநகர கிழக்கு பகுதி மாணவரணி துணை அமைப்பாளராக இருந்து வந்தார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 3 வயது மகன் உள்ளனர். இவர் தனது குடும்பத்துடன் திண்டுக்கல் வ.உ.சி. நகர் பகுதியில் வசித்து வந்தார்.
இவர் மீது கொலை, ஆள் கடத்தல், அடிதடி என பல வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இருசக்கர வாகனத்தில் மகனுடன் சென்றபோது காரில் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் பட்டறை, சரவணனை கத்தி, அரிவாள் போன்ற ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதுகுறித்து திண்டுக்கல் நகர் வடக்கு போலீசார் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்ற வாளிகளை தேடி வந்தனர். இந்தநிலையில் இன்று அருப்புக்கோட்டை ஜூடிசியல் கோர்ட்டில் ஆசிப் முகமது, முகமது மீரான், கலீல் அகமது, சதாம் உசேன், முகமது இர்ஃபான், சக்தி மகேஸ்வர், முகமது அப்துல்லா, சேக் அப்துல்லா ஆகிய 8 பேர் சரணடைந்தனர்.