என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சோழவரம் அருகே நடுரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அச்சம்
    X

    சோழவரம் அருகே நடுரோட்டில் திடீர் பள்ளம்: பொதுமக்கள் அச்சம்

    • சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம்.
    • பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    பொன்னேரி:

    சோழவரம் அருகே உள்ளது இருளிபட்டு சத்திரம் கிராமம். இன்று காலை அப்பகுதியில் மீஞ்சூர்-நெகநாதபுரம் சாலையில் திடீரென பள்ளம் ஏற்பட்டது.

    இந்த பள்ளம் ஆழ்துளை கிணற்று பள்ளமாக இருக்கலாம் என்று தெரிகிறது. குடியிருப்பு அருகே சிறுவர், சிறுமிகள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில் பொதுமக்கள் பள்ளத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்து உள்ளனர்.

    இந்த பள்ளத்தை சரியான முறையில் உடனடியாக மூட வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது:-

    இந்த பள்ளம் 100 அடிக்கும் கீழ் சென்றது. ஆழ்துறை கிணறுக்காக போடப்பட்ட பள்ளத்தை சரியாக மூடாமல் அதன் மேல் சாலை அமைத்து உள்ளனர்.

    இந்த சாலை 15 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ளது. குழந்தைகள் அதிகம் நடமாடும் பகுதி என்பதால் அசம்பாவிதம் ஏற்படும் முன்பு இந்த ஆழ்துளை கிணற்று பள்ளத்தை மூட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×