என் மலர்
உள்ளூர் செய்திகள்

மொடக்குறிச்சி அருகே மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
- செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார்.
- இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.
ஈரோடு:
சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த இரட்டை புளியம்மரத்தூர் பகுதியை சேர்ந்தவர் செந்தமிழன் (32). இவர் ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி அடுத்த கொள்ளுகாட்டு மேட்டில் உள்ள ஒரு நிறுவனத்தில் கடந்த ஒரு வருடமாக வெல்டராக வேலை பார்த்து வந்தார்.
இந்நிலையில் செந்தமிழன் சம்பவத்தன்றும் வழக்கம் போல் நிறுவனத்தில் வெல்டிங் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தார். இரும்பு பட்டாக்களை வெல்டிங் செய்து கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக மின்சாரம் பாய்ந்து செந்தமிழன் மயங்கி விழுந்தார்.
உடனடியாக அவரை ஈரோட்டில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே செந்தமிழன் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து மொடக்குறிச்சி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






