search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தந்தை திருட்டு வழக்கில் கைது-  அவமானத்தில் பட்டதாரி மகன் தற்கொலை
    X

    தந்தை திருட்டு வழக்கில் கைது- அவமானத்தில் பட்டதாரி மகன் தற்கொலை

    • பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
    • பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    அருப்புக்கோட்டை:

    அருப்புக்கோட்டை தேவா டெக்ஸ் காலனி பகுதியில் வசித்து வருபவர் துரை பிரித்திவிராஜ் (35). இவர் வி.ஏ.ஓ. வாக பணியாற்றி விருப்பு ஓய்வுபெற்றவர்.

    தற்போது இவர் பாரதிய ஜனதா கட்சியின் சுற்றுப்புற சூழல் அணி பிரிவில் விருதுநகர் கிழக்கு மாவட்ட தலைவராக இருந்து வருகிறார்.

    கடந்த 23-ந்தேதி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் உறவினர் இல்ல விழாவிற்கு சென்று விட்டு வீடு திரும்பினார்.

    அப்போது வீட்டை திறந்து உள்ளே சென்று பார்த்த போது பீரோ திறந்து கிடப்பது தெரிய வந்தது. பீரோவை சோதனையிட்ட போது அதில் வைத்திருந்த ரூ.2 லட்சத்து 60 ஆயிரம் மற்றும் ஐந்தாயிரம் மதிப்புள்ள 2 ஸ்மார்ட் வாட்ச்கள் திருடு போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

    இதுகுறித்து அருப்புக்கோட்டை நகர் குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கீதா தேவி வழக்குப்பதிவு செய்து பிரிதீவிராஜ் வீட்டில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமரா வீடியோ காட்சிகள் மூலம் குற்றவாளிகளை தேடி வந்தனர்.

    இந்நிலையில் அருப்புக்கோட்டை அருகே உள்ள குறிஞ்சாக்குளம் பகுதியில் வசித்து வரும் மாணிக்கம் (61) என்பவர் பணம் மற்றும் பொருட்களை திருடியது தெரியவந்தது. அவரிடம் நடத்திய விசாரணையில் பணத்தையும், பொருட்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதையடுத்து அவரை கைது செய்தனர். மாணிக்கத்திற்கு ஏற்கனவே திருமணமாகி இருந்த நிலையில் தற்போது குறிஞ்சாக்குளத்தில் 2-வது திருமணம் முடித்து கடந்த 5 வருடங்களாக வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.

    2-வது மனைவியின் மகன் கர்ணன் பி.எஸ்.சி. பட்டதாரி ஆவார். தந்தை மாணிக்கம் திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டதால் கர்ணன் விரக்தியான மனநிலையில் இருந்துள்ளார். நேற்று வீட்டில் யாருமில்லாத நேரத்தில் அவமானம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தந்தை திருட்டு வழக்கில் கைதானதால் பட்டதாரி மகன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

    Next Story
    ×