என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொதிக்கும் தண்ணீரை ஊற்றி கணவரை கொன்ற மனைவி, மாமியார் கைது
- குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி, மாமியார் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
திருச்சி:
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பாரதிபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 27). இவரது மனைவி டயானா மேரி (வயது 22). இந்த தம்பதிக்கு குழந்தை இல்லை.
ஆட்டோ டிரைவரான செல்வராஜ் அடிக்கடி குடித்து விட்டு வீட்டிற்கு வந்து மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவரது மனைவி பலமுறை கண்டித்தும் திருந்தவில்லை.
இதற்கிடையே கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கணவரிடம், கோபித்துக் கொண்டு அதே பகுதியில் வசித்து வரும் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் கணவர் வீட்டுக்கு திரும்ப செல்லவில்லை. உறவினர்கள் சமரசம் செய்து வைத்தும் அதனை டயானா மேரி ஏற்கவில்லை.
இந்தநிலையில் சம்பவத்தன்று செல்வராஜ் மனைவியைத் தேடி மாமியார் வீட்டுக்குச் சென்றார். அப்போது டயானா மேரியிடம் தன்னுடன் குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். அதற்கு அவர் ஒப்புக்கொள்ள மறுப்பு தெரிவித்தார். இதனால் மீண்டும் அவர்களுக்கு இடையே தகராறு மூண்டது.
இதில் ஆத்திரம் அடைந்த செல்வராஜ், மனைவி டயானா மேரியை சரமாரியாக அடித்ததாக தெரிகிறது. இதனால் கோபத்தின் உச்சிக்குச் சென்ற அவர் வீட்டில் இருந்த அடுப்பில் கொதித்துக் கொண்டிருந்த தண்ணீரை எடுத்து வந்து சற்றும் யோசிக்காமல் கணவர் மீது ஊற்றிவிட்டார்.
இதில் உடல் வெந்து செல்வராஜ் வலியால் அலறி துடித்தார். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு துவாக்குடி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை 4 மணியளவில் செல்வராஜ் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். மனைவி ஊற்றிய சுடுநீர் அவரது அடிவயிற்றில் பட்டு ஆழமான காயம் ஏற்பட்டதால் கிட்னி பாதித்து இறந்து விட்டதாக போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இது பற்றி தகவல் அறிந்த திருவெறும்பூர் போலீசார் செல்வராஜின் மனைவி டயானா மேரி, மாமியார் இன்னாசியம்மாள் (43) ஆகியோரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி ஜெயிலில் அடைத்தனர்.
குடித்துவிட்டு தகராறு செய்த ஆட்டோ டிரைவரை கொதிக்கும் நீரை ஊற்றி கொலை செய்த சம்பவம் திருவெறும்பூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்