என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உங்கள் வீட்டுப் பிள்ளையாக நினைத்து பாராளுமன்ற தேர்தலில் என்னை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்
- எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது.
- மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது.
மதுரை:
மதுரை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் பா.சரவணன் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூவுடன் இணைந்து பழங்காநத்தம், மாடக்குளம், சம்பட்டிபுரம், முடக்குச்சாலை, அண்ணா மெயின் வீதி, பெத்தானியாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் இரட்டை இலைக்கு வாக்கு சேகரித்தார். பழங்காநத்தம் நடைபெற்ற பிரசாரத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் கலந்து கொண்டார். ஏராளமான பெண்கள் டாக்டர் சரவணனுக்கு ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்து ராட்சசகிரேன் மூலம் பிரமாண்ட மாலை அணிவித்தனர்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசுகையில், மதுரைக்கு 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் திட்டத்தை அ.தி.மு.க. கொண்டு வந்தது. மதுரை மாவட்டத்திற்கு ரூ.10,000 கோடி மதிப்பிலான திட்டங்களை அ.தி.மு.க. அரசு தந்துள்ளது. ஆகவே மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த டாக்டர் சரவணனை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்றார்.
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வன் பேசுகையில், தி.மு.க. அரசு மீது ஊழியர்கள் ஆசிரியர்கள் அதிருப்தி, மகளிர் உதவித் தொகை தொகை வழங்குவதில் குளறுபடி, எடப்பாடி பழனிச்சாமி துணிச்சலுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறியது. தமிழகத்தில் போதைப்பொருள் நடமாட்டம் ஆகிய காரணங்களுக்காக மக்கள் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளை புறக்கணித்து அ.தி.மு.க.வை வெற்றி பெறச் செய்ய முடிவு விட்டார்கள்.
வைகை நதிக்கரையில் இருந்து டாக்டர் சரவணன் என்ற பாராளுமன்ற உறுப்பினரை தேர்வு செய்து யமுனை நதிக்கரைக்கு அனுப்பி வையுங்கள் என பேசினார். அ.தி.மு.க. வேட்பாளர் டாக்டர் சரவணன் பேசுகையில், "உங்கள் வீட்டுப் பிள்ளையா நினைத்து என்னை வெற்றி பெறச் செய்தால் மதுரை மக்களவைத் தொகுதிக்கு தேவையான நலத்திட்டங்களை நிச்சயம் செயல்படுத்துவேன்" என உருக்கமான பேசினார்.