search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    குங்பூ தற்காப்பு கலையை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை- அமைச்சர் அன்பரசன் பேச்சு
    X

    குங்பூ தற்காப்பு கலையை அரசு பாடத்திட்டத்தில் சேர்க்க நடவடிக்கை- அமைச்சர் அன்பரசன் பேச்சு

    • உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.
    • குங்பூ தற்காப்பு கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    மாமல்லபுரம்:

    மாமல்லபுரம் அடுத்த வடகடம்பாடி கிராமத்தில் மன்சூரியா குங்பூ தற்காப்பு கலையின் சர்வதேச தலைமையகம் உள்ளது. இதை நிறுவிய குங்பூ வீரர் சேகரின் 8வது நினைவஞ்சலி விழா நேற்று மதியம் பூஞ்சேரி கிங்ஸ் இன்டர்நேஷனல் மெடிக்கல் அகாடமி அரங்கத்தில் நடைபெற்றது.

    விழாவில் உள்நாட்டு, வெளிநாட்டு குங்பூ மற்றும் பல்வகை தற்காப்புக்கலை வீரர்கள் 12 பேருக்கு அமைச்சர் அன்பரசன் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார்.

    விழாவில் பேசிய அமைச்சர், தற்போது இளைஞர்கள் செல்போன், சோஷியல் மீடியா என அதில் முழு நேரமும் மூழ்கி உடலையும், மனதையும், முயற்சியையும் இழந்து வருகிறார்கள். குங்பூ தற்காப்புக்கலை, அவர்களை தீய செயல்களில் இருந்து மீட்டு வருவதை இங்குள்ள இளைஞர்களை பார்த்து உணர்கிறேன். இந்த கலையை பள்ளி பாடத்தில் சேர்க்க, முதலமைச்சர், விளையாட்டுத்துறை அமைச்சர் இருவரிடமும் பரிந்துரை செய்கிறேன் என்றார்.

    விழாவில் சென்னை எழும்பூர் நீதிமன்ற நீதிபதி பார்த்தீபன், ம.தி.மு.க துணை பொதுச்செயலாளர் மல்லை சத்யா, குங்பூ பயிற்சியக செயலாளர் அஷோக்குமார் மற்றும் பிறமாநில, வெளிமாவட்ட குங்பூ மாணவர்கள் அவர்களின் பெற்றோர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×