என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஈபிஎஸ்-க்கு மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்- மு.க.ஸ்டாலின்
- திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
- வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.
சென்னை:
சென்னை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திமுக ஆட்சியை எடைபோடும் தேர்தலாக, இந்த இடைத்தேர்தல் இருக்கும் என கூறி வந்தேன்.
* பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கான அச்சாரமாக ஈரோடு கிழக்கு வெற்றி உள்ளது.
* பாராளுமன்ற தேர்தலில் இதைவிட பெரிய வெற்றியை மக்கள் வழங்குவார்கள்.
* வரலாற்றில் பதிவாகும் மாபெரும் வெற்றியை மக்கள் இளங்கோவனுக்கு கொடுத்துள்ளனர்.
* நான் ஏற்கனவே தேசிய அரசியலில் தான் உள்ளேன்.
* திராவிட மாடல் ஆட்சி தொடர வேண்டும் என்று மக்கள் பெரும் ஆதரவு அளித்துள்ளனர்.
* நாலாந்தர பேச்சாளர் போல் எடப்பாடி பழனிசாமி பேசிவந்தார்; மக்கள் நல்ல பதிலடி கொடுத்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story






