search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பள்ளி மாணவ-மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பரிசு வாங்கினார்
    X

    பள்ளி மாணவ-மாணவர்களுக்கு இடையே நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு எம்.எல்.ஏ. பரிசு வாங்கினார்

    மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது.

    வண்டலூர்:

    நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் செங்கல்பட்டு மண்டலத்தில் உள்ள 18 நகராட்சிகளை சேர்ந்த பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் மற்றும் என் குப்பை என் பொறுப்பு பணிகள் என்ற தலைப்பில் நடைபெற்ற ஓவிய போட்டியில் வெற்றி பெற்று முதல் 8 இடங்களை பிடித்த நகராட்சிகளை சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி மறைமலைநகர் நகராட்சி அலுவலகத்தில் உள்ள கூட்ட அரங்கத்தில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மறைமலைநகர் நகர மன்ற தலைவர் ஜெ.சண்முகம் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் லட்சுமி, நகர மன்ற துணைத் தலைவர் சித்ரா கமலக்கண்ணன், ஆகியோர் முன்னிலை வைத்தனர்.

    சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமி மதுசூதனன் கலந்து கொண்டு ஓவிய போட்டியில் முதல் பரிசு பெற்ற திருவேற்காடு நகராட்சி பகுதியை சேர்ந்த மாணவி ஷ்ரவந்திகாவிற்கு ரூ.20 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ் ஆகியவற்றை எம்.எல்.ஏ. வழங்கினார். இதேபோல 2-ம் இடம் பெற்ற திருவள்ளூர் நகராட்சி சேர்ந்த மாணவி அக்ஷயாவுக்கு ரூ.10 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், 3-ம் இடம் பெற்ற பூவிருந்தவல்லி நகராட்சியை சேர்ந்த மாணவிக்கு ரூ.5 ஆயிரம் பணம் மற்றும் சான்றிதழ், ஆறுதல் பரிசு பெற்ற மதுராந்தகம், மறைமலைநகர், வடலூர், திருநின்றவூர், செங்கல்பட்டு, ஆகிய நகராட்சிகளை சேர்ந்த மாணவர்களுக்கு தலா ரூ.1000 மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதில் நகராட்சி பொறியாளர் வெங்கடேசன், துப்புரவு ஆய்வாளர் ஆர்.சிவமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×