search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு மீண்டும் வாய்ப்பு...  காரணம் தெரியுமா?
    X

    வேலூர் தொகுதியில் கதிர் ஆனந்துக்கு மீண்டும் வாய்ப்பு... காரணம் தெரியுமா?

    • 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார் கதிர் ஆனந்த்.
    • வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது.

    வேலூர்:

    தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. முதற்கட்டமாக ஏப்ரல் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள கட்சிகளுக்கு தொகுதிப்பங்கீடு முடிந்து ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. மொத்தமுள்ள 40 தொகுதிகளில் திமுக 21 தொகுதிகளில் போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்கள் பட்டியலும் அறிவிக்கப்பட்டு விட்டது.

    அதில் முக்கியமானவர் கதிர் ஆனந்த்... அமைச்சர் துரைமுருகன் மகனான இவர் கடந்த 2019ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்தை வீழ்த்தி வெற்றி பெற்றிருந்தார்.

    கதிர் ஆனந்த் கட்சி பணி மற்றும் மக்கள் பணி இரண்டிலும் சிறப்பான வகையில் செயல்பட்டதாலேயே மீண்டும் ஒருமுறை கட்சி தலைமை அவருக்கு வாய்ப்பு வழங்கியுள்ளதாக தெரிகிறது.

    அதன்படி அவரின் முக்கிய செயல்பாடு என எடுத்துக் கொண்டால், எம்.பி. தொகுதி நிதியிலிருந்து வேலூர் மாவட்டத்திற்கு சத்துவாச்சாரி சுரங்கப்பாதை கொண்டு வந்தது, வேலூர் விமான நிலையம் மக்கள் பயன்பாட்டிற்கு வருவது தொடர்பாக மக்களவையில் குரல் கொடுத்தது போன்றவை மிக முக்கியமானவையாகும். வந்தே பாரத் ரெயில் காட்பாடியில் நின்று செல்ல வழிவகுத்ததில் அளப்பரிய பங்கு கதிர் ஆனந்துக்கு உள்ளது என கூறினால் அது மிகையாகாது.

    வேலூர் பாராளுமன்ற தொகுதியில் உள்ள அடிப்படை பிரச்சனைகளுக்கு நேரில் செல்ல முடியாவிட்டாலும் மக்களுக்கு தேவையான விஷயத்தை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு தீர்த்து வைத்திருக்கிறார்.

    இதனாலேயே அவரை மீண்டும் வேட்பாளராக கட்சி தலைமை தேர்வு செய்ய வைத்துள்ளது.

    Next Story
    ×