என் மலர்
உள்ளூர் செய்திகள்

மதுரையில் 13 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை: பிளஸ்-2 மாணவர் போக்சோவில் கைது
- சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது.
- மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
திருப்பரங்குன்றம்:
மதுரை பசுமலையைச் சேர்ந்த 19 வயதுடைய மாணவர் அதே பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த மாணவர் தனது வீட்டின் அருகே வசிக்கும் 13 வயதுடைய 8-ம் வகுப்பு படிக்கும் சிறுமியை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது.
சிறுமியும், பிளஸ்-2 மாணவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்ததாக தெரிகிறது. அப்போது மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதனை சிறுமி கண்டித்துள்ளார். ஆனாலும் மாணவரின் தொல்லை அத்துமீறவே தனக்கு நேர்ந்த கொடுமையை சிறுமி பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவர்கள் உடனடியாக திருப்பரங்குன்றம் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் பிளஸ்-2 மாணவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அந்த மாணவரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.






