என் மலர்
உள்ளூர் செய்திகள்

செங்கோட்டை கூட்டத்தில் தகராறு: நகர்மன்ற தலைவர்-கவுன்சிலர்கள் மீது வழக்கு
- கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் நகரசபை தலைவர் ராமலெட்சுமி பதவி விலக வேண்டும் என்று கூறினர்.
- ராமலெட்சுமி செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார்.
செங்கோட்டை:
தென்காசி மாவட்டம் செங்கோட்டை நகர்மன்ற கூட்டம் நேற்று நகராட்சி அலுவலகத்தில் தலைவர் ராமலெட்சுமி தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட கவுன்சிலர்கள் சுடர் ஒளிவு, முத்துபாண்டி, ராம்குமார் ஆகியோர் திடீரென எழுந்து நகரசபை தலைவர் ராமலெட்சுமி தங்களது வார்டுகளில் பணிகளை நிறைவேற்றி தரவில்லை. எனவே பதவி விலக வேண்டும் என்று கூறினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இதுதொடர்பாக ராமலெட்சுமி செங்கோட்டை போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில் கவுன்சிலர்கள் சுடர் ஒளிவு, முத்துப்பாண்டி, ராம்குமார் ஆகிய 3 பேர் மீதும் அலுவலகத்தில் அத்துமீறி நுழைந்து, அவதூறாக பேசியதாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதேபோல் சுடர்ஒளிவு புகாரில், தலைவர் ராமலெட்சுமி, கவுன்சிலர் பேபி ரஜத் பாத்திமா ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.






