என் மலர்
உள்ளூர் செய்திகள்

கே.எஸ்.அழகிரியை கண்டித்து நெல்லையில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள்
- மருதம் நலச்சங்கம் சார்பில் நெல்லை மாநகரில் பாளை உள்ளிட்ட பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தல்.
- தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
நெல்லை:
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரியின் உறவினர் மீது கடந்த மாதம் சென்னையில் வைத்து இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையாளர் கண்ணன் ஐ.ஏ.எஸ். என்பவர் தாக்குதல் நடத்தியதாக அசோக்நகர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் மருதம் நலச்சங்கம் சார்பில் நெல்லை மாநகரில் பாளை உள்ளிட்ட பகுதியில் ஐ.ஏ.எஸ். அதிகாரி கண்ணன் மீது பதியப்பட்டுள்ள வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும், தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ். அழகிரி மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.
மேலும் போஸ்டரில் காங்கிரஸ் தலைவர் அழகிரியை கண்டிப்பதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Next Story






