search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஆமூர் ஏரியில் மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை- 20 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் ஆத்திரம்
    X

    ஆமூர் ஏரியில் மணல் எடுப்பதை கண்டித்து முற்றுகை- 20 அடிக்கும் மேலாக பள்ளம் தோண்டியதால் பொதுமக்கள் ஆத்திரம்

    • ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.
    • ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது.

    பொன்னேரி:

    பொன்னேரி அடுத்த ஆமூரில் சுமார் ஒரு லட்சம் விவசாய நிலங்களுக்கு தண்ணீர் வழங்கக்கூடிய மிகப் பெரிய ஆமூர் ஏரி உள்ளது.

    இந்த ஏரியில் இருந்து விவசாயத்திற்கும் குடிநீருக்காகவும் பொது மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இந்த நிலையில் ஆமூர் ஏரி ஒட்டிய பகுதியில் காட்டுப் பள்ளி துறைமுகத்தில் இருந்து சென்னை கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலை வரை 400 அடி சாலை போடப்பட்டு வருகிறது.

    இதற்காக இப்பகுதியில் உள்ள கோரைகளில் மண் எடுக்கப்பட்டு சாலை அமைக்கப்பட்டு வருகிறது.இந்த நிலையில் அரசு கூறி உள்ள மூன்று அடி என்னும் அளவைவிட சுமார் 20 அடிக்கும் மேலாக கோரை மண் மற்றும் மணல் அள்ளப்படுவதால் ஏரியின் நீர் இருப்பு முற்றிலும் பாதிக்கப்பட்டு உள்ளதாகவும் விவசாயிகளுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறி பொதுமக்கள் கோரையை முற்றுகையிட்டு லாரிகளை மடக்கி நிறுத்தினர்.

    சம்பவ இடத்திற்கு பொன்னேரி காவல்துறையினர் விரைந்து சென்று பொது மக்களுடன் சமாதானம் பேசி கோரை உரிமையாளர்களிடம் அரசு நிர்ணயித்த அளவைவிட பள்ளம் எடுக்கக் கூடாது என அறிவுறுத்தியதன் பேரில் பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

    Next Story
    ×