என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
கொடுமுடி அருகே சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
- தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது.
- நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர்.
கொடுமுடி:
ஈரோடு மாவட்டம் கொடுமுடி அருகே உள்ள சிவகிரி அம்மன் நகர், ஈ.பி.ஆபிஸ் ரோடு பகுதியை சேர்ந்தவர் அருண்குமார் (வயது22). கூலி தொழிலாளி. இவருக்கு கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு தான் திருமணம் ஆனது.
அதேபோல் சிவகிரி திரு.வி.க. பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது19). இவர் நஞ்சை ஊத்துக்குளி பகுதியில் உள்ள தனியார் பாலிடெக்னிக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இருவரும் நண்பர்கள்.
இந்நிலையில் நேற்று இரவு அருண்குமார், மணிகண்டன் 2 பேரும் கொடுமுடிக்கு ஒரு வேலையாக சென்று விட்டு மீண்டும் வீட்டுக்கு மோட்டார்சைக்கிளில் திரும்பி கொண்டு இருந்தனர்.
அப்போது தாமரைபாளையம் அருகே உள்ள கோட்டைக்கட்டு வலசு பகுதியில் சாலையின் ஓரத்தில் இருந்த தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் பயங்கரமாக மோதியது. இதில் நிலை தடுமாறி அருண்குமார் மற்றும் மணிகண்டன் ரோட்டில் விழுந்துள்ளனர். இதில் மணிகண்டன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அருண்குமார் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடினார்.
இந்த விபத்தை பார்த்து அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து இது குறித்து கொடுமுடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த போலீசார் 108 ஆம்புலன்ஸ் மூலம் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த அருண்கு மாரை மீட்டு சிகிச்சைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே அருண்குமாரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதேபோல் விபத்தில் உயிரிழந்த மணிகண்டன் உடலை பிரேத பரிசோத னைக்காக கொடுமுடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். 2 பேர் உடலையும் பார்த்து அவர்களது உறவினர்கள் அழுதது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது குறித்து கொடுமுடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் நண்பர்கள் 2 பேர் இறந்தது அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்