search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பெண் பூ வியாபாரியை தாக்கி ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை- மர்ம வாலிபர் துணிகரம்
    X

    பெண் பூ வியாபாரியை தாக்கி ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகை கொள்ளை- மர்ம வாலிபர் துணிகரம்

    • பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து மர்ம வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.
    • விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    காஞ்சிபுரம்:

    காஞ்சிபுரம், கோபால் சாமி தோட்டம் பகுதியில் வசித்து வருபவர் பத்மாவதி. இவர் ராஜாஜி மார்க்கெட் அருகே பூ வியாபாரம் செய்து வருகிறார்.

    நேற்று இரவு அவர் வியாபாரம் முடிந்ததும் வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியே வந்த மர்ம வாலிபர் பத்மாவதியிடம் பேச்சு கொடுத்தார். திடீரென அவன் பத்மாவதி அணிந்து இருந்த ரூ.8 லட்சம் மதிப்புள்ள நகையை பறித்து விட்டு கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான்.

    இதுகுறித்து விஷ்ணு காஞ்சி போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிரா காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மதுரவாயல் பகுதியை சேர்ந்தவர் சீனிவாசன். மீன் வியாபாரி. இவர் நேற்று அதிகாலை "டிரை சைக்கிளில்" வானகரம் மீன் மார்க்கெட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த 3பேர் கும்பல் கத்தியால் வெட்டி பணம் பறிக்க முயன்றனர் ஆனால் அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கம் உள்ளவர்கள் திரண்டதால் கொள்ளை கும்பல் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதில் படுகாயமடைந்த சீனிவாசனுக்கு கீழ்ப்பாக்கம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து மதுரவாயல் போலீஸ் சப் - இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். கண்காணிப்பு கேமரா பதிவுகளை கொண்டு தப்பி ஓடிய நெற்குன்றம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் என்கிற திருட்டு விக்கி (21) என்பவனை கைது செய்தனர்.

    அவன் மீது ஏற்கனவே பல்வேறு வழிப்பறி மற்றும் திருட்டு வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான சாமுவேல், நிஷாந்த் ஆகிய இருவரையும் பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

    Next Story
    ×