search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்
    X

    வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைகழகத்தில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாட்டம்

    • கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து கோலம் இட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.
    • மேற்கத்திய நடனம், உறியடி, கயிறிழுத்தல்,கயிறு தாண்டுதல், நெருப்பாட்டம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    வல்லம்:

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காரணமாக பொங்கல் பண்டிகை கொண்டாட்டம் என்பது உற்சாகமின்றி இருந்த நிலையில் இந்த ஆண்டு மீண்டும் பொங்கல் விழா உற்சாகம் காண தொடங்கிவிட்டது.

    பொங்கல் பண்டிகைக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில், தஞ்சையை அடுத்துள்ள வல்லம் பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் கல்லூரி மாணவ, மாணவிகள், பேராசிரியர்கள் ஒன்றிணைந்து கோலம் இட்டு பொங்கல் வைத்து உற்சாகமாக சமத்துவ பொங்கல் விழாவை இன்று கொண்டாடினர்.

    இதில்மாணவர்களின் நாட்டுப்புற பாடல்கள், கட்டக்கால்ஆட்டம், தப்பாட்டம், சிலம்பாட்டம், மயிலாட்டம், கோலாட்டம், ஒயிலாட்டம், மேற்கத்திய நடனம், உறியடி, கயிறிழுத்தல்,கயிறு தாண்டுதல், நெருப்பாட்டம் உள்பட பல கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    இதில் பெரியார் மணியம்மை பல்கலைகழக ஆட்சி மன்ற குழு உறுப்பினர் அன்புராஜ், பதிவாளர் வித்யா, துணைவேந்தர் வேலுச்சாமி, துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×