search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்- திருமாவளவன்
    X

    ஈரோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெறும்- திருமாவளவன்

    • நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது.
    • அ.தி.மு.க. கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தூத்துக்குடி:

    விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் திருமாவளவன் எம்.பி. இன்று தூத்துக்குடி விமான நிலையத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயல் பகுதியில் நடைபெற்ற குடிநீரில் மலம் கலந்த விவகாரம் தொடர்பாக சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு முதல்-அமைச்சர் உத்தரவிட்டுள்ளார். சி.பி.சி.ஐ.டி. விசாரணையில் உண்மை குற்றவாளிகள் கண்டறியப்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

    இது போன்ற தவறுகளை தடுக்க கியூ பிரிவு போல் தனி உளவுப்பிரிவு அமைக்க வேண்டும் என்பதை அரசுக்கு கோரிக்கையாக வைக்கின்றேன். இரட்டை குவளை முறை அதிகமாக உள்ளது. எனவே அதனை ஒழிக்க சிறப்பு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும்.

    ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெறும். அதற்கு கூட்டணி கட்சிகள் வலுவாக பாடுபடுவோம்.

    நடைபெற இருக்கும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.தி.மு.க. வெற்றிபெறுவது இயலாது. ஏனெனில் அந்த கட்சி சின்னத்தினை இழந்து நிற்பதோடு, மட்டுமல்லாமல் அந்த கட்சி 2 பிரிவுகளாக உள்ளது. எனவே வெற்றி பெறுவது கடினம்.

    தமிழகத்தில் ஆதிதிராவிட மக்களுக்கு தாட்கோ லோன்கள் கொடுப்பதற்கு தேசிய வங்கிகள் முன்வராத நிலை தமிழகத்தில் உள்ளது.

    ராமர் பாலத்தை தேசிய சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய அரசு மனுதாக்கல் செய்துள்ளது. மத்திய அரசுதான் அது ராமர் பாலம் இல்லை என்று சொன்னது. இப்போது இப்படி சொல்வது அதிர்ச்சியாக உள்ளது.

    சேது சமுத்திர திட்டத்தில் மீனவர்களின் கோரிக்கையை அரசு பரிசீலனை செய்ய வேண்டும். ஸ்டெர்லைட் துப்பாக்கிசூடு விவகாரம் தொடர்பாக அதிகாரிகள் மீது சட்டபூர்வமான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×