என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- வைகோ வற்புறுத்தல்
    X

    தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும்- வைகோ வற்புறுத்தல்

    • கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர்.
    • தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர்.

    சென்னை:

    இலங்கை கடற்படையினரால் இந்திய மீனவர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து நேற்று பாராளுமன்ற மேல் சபையில் நேரமில்லா நேரத்தில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ எம்.பி. பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

    கடந்த 45 ஆண்டுகளாக, 800க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கொல்லப்பட்டுள்ளனர். தொடர்ந்து தமிழக மீனவர்களை கொடூரமாக தாக்கி, அவர்களின் படகுகளை சேதப்படுத்தப்படுத்துகின்றனர். மீன்பிடி வலைகளையும் சேதப்படுத்துகிறார்கள். அண்மைக்காலமாக படகுகளை கைப்பற்றி, ஏலத்தில் விட்டுவிடுகின்றனர். இதனால் தமிழக மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிப்புக்கு உள்ளாகிறது.

    இலங்கைக் கடற்படையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மீனவர்களின் குடும்பத்திற்கு இலங்கை அரசாங்கத்திடமிருந்து உரிய இழப்பீட்டுத் தொகையை இந்திய அரசு பெற்றுத் தர வேண்டும். இலங்கை கடற்படையினரின் இந்த இடைவிடாத துன்புறுத்தலுக்கு நிரந்தர தீர்வு காண இலங்கை அரசுடன் இந்தியா உயர்மட்ட பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×