search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    யானை தாக்கி விவசாயி பலி- உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்
    X

    யானை தாக்கி விவசாயி பலி- உடலை சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்ட உறவினர்கள்

    • உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
    • சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    கிருஷ்ணகிரி:

    கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள மகராஜாகடை கிராமத்தை சாம்பசிவம் (வயது 55). விவசாயியான இவர் கிராமத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலத்தில் கொள்ளு பயிரை அறுவடை செய்வதற்கு இன்று அதிகாலை 4மணி சென்றுள்ளார். அப்போது அப்பகுதியில் இருந்து ஒற்றை காட்டு யானை திடீரென்று வந்து சாம்பசிவத்தை தாக்கி கொன்றுள்ளது. பின்னர் காலையில் தோட்டத்திற்கு சென்ற குடும்பத்தினர் அங்கு சாமபசிவத்தின் உடல் சிதைந்து உயிரிழந்து கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதையடுத்து பொதுமக்கள் மகாராஜா கடை போலீசாருக்கும் மற்றும் வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    அப்போது யானை தாக்கி உயிரிழந்த சாம்பசிவத்தின் உடலை உறவினர்கள் மீட்டு சாலையில் வைத்து பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக ஒற்றை யானையை கர்நாடகா வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு உரிய நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

    இதைத்தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிருஷ்ணகிரி கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சங்கு மற்றும் கிருஷ்ணகிரி உட்கோட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் மற்றும் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

    இதனால் சாலை இருபுறமும் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×