search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முன்னாள் ராணுவ வீரர் கொலை- கட்டிலில் தூங்கிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி
    X

    முன்னாள் ராணுவ வீரர் கொலை- கட்டிலில் தூங்கிய கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொன்ற மனைவி

    • கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார்.
    • சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார்.

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை அடுத்த மொழுகம் பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 42). முன்னாள் ராணுவ வீரர். ஆரணி வி.ஏ.கே நகர் அருகில் உள்ள தேனருவி நகரில் வசித்து வந்தார். இவரது மனைவி ரேவதி, பிரியதர்ஷினி என்ற மகள் லிங்கேஸ்வரன், நிதின் ஆகிய மகன்கள் உள்ளனர்.

    கணவன்- மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக ரேவதி அவரது மகன் மகளுடன் ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள அவரது தாய் வீட்டில் வசித்து வந்தார்.

    கடந்த சில நாட்களுக்கு முன்பு வெற்றிவேல் பைக் விபத்தில் காயம் அடைந்தார். சிகிச்சை முடிந்து அவர் நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அப்போது அவரைப் பார்க்க ரேவதி வந்திருந்தார். அன்று இரவு ரேவதி அங்கேயே தங்கினார்.

    இந்த நிலையில் வெற்றிவேல் மர்மமான முறையில் இறந்தார். இதுகுறித்து ஆரணி டவுன் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரேவதி அவரது கள்ளக்காதலன் நாகராஜ் மற்றும் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவருடன் சேர்ந்து கணவனை கொலை செய்தது தெரிய வந்தது.

    இதனை தொடர்ந்து ரேவதி நாகராஜ் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் என்பவர் வேலூர் கோர்ட்டில் நீதிபதி முன்னிலையில் சரணடைந்தார். 3 பேரும் வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    கணவனை கொடூரமாக கொலை செய்தது குறித்து ரேவதி போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் வெற்றிவேலின் தங்கை பொம்மி என்பவரின் கணவர் காமக்கூர் பாளையம் கிராமத்தை சேர்ந்த நாகராஜிடன் (41) கடந்த 3 ஆண்டுக்கு முன்பு எனக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டது. நாங்கள் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்தோம்.

    இதனையறிந்த எனது கணவர் கள்ளத்தொடர்பை கைவிடும் படி கூறினார். இதனால் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. நான் எனது மகள் மகன்களை அழைத்துக்கொண்டு ஒண்ணுபுரம் கிராமத்தில் உள்ள எனது தாய் வீட்டிற்கு சென்று விட்டேன்.

    இதுகுறித்து நாகராஜுடம் தெரிவித்தேன். இருவரும் சேர்ந்து கூலிப்படை மூலம் வெற்றிவேலை தீர்த்து கட்ட முடிவு செய்தோம்.

    கடந்த மார்ச் மாதம் கூலிப்படை நபரான கண்ணமங்கலம் அருகே உள்ள மோட்டுபாளையம் பகுதியை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் ராஜேஷ் (32) என்பவரை அணுகினோம். ரூ. 10 லட்சம் பேரம் பேசி அட்வான்சாக 2 லட்சம் ரூபாய் கொடுத்தோம். கடந்த 6 மாதங்களாக எனது கணவரை கொலை செய்வதற்காக சமயம் பார்த்து காத்திருந்தேன்.

    அப்போதுதான் எனது கணவர் வெற்றிவேலுக்கு பைக் விபத்தில் காயம் ஏற்பட்டது தெரிய வந்தது. உடனடியாக அவரை வேலூர் தனியார் ஆஸ்பத்திரிக்கு சென்று பார்த்தேன். அங்கு சிகிச்சை முடிந்து அவருடன் வீட்டிற்கு வந்தேன்.

    கணவன் தனியாக இருப்பதை பயன்படுத்தி அவரை தீர்த்து கட்ட இதுதான் நல்ல சமயம் என முடிவு செய்தேன்.

    இது குறித்து எனது கள்ளக்காதலன் நாகராஜுக்கு தகவல் தெரிவித்தேன். சம்பவத்தன்று அதிகாலை நாகராஜ் மற்றும் ஏற்கனவே பணம் கொடுத்து வைத்திருந்த கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ் இருவரையும் வீட்டுக்கு வரவழைத்தேன். அப்போது என்னுடைய கணவர் வெற்றிவேல் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தார். அவரது கழுத்தில் ராஜேஷ் ஓங்கி குத்தினார். வலி தாங்காமல் கண் விழித்து அவர் சத்தம் போட முயன்றார். உடனே 3 பேரும் சேர்ந்து அவரை கட்டிலிலேயே அமுக்கி பிடித்தோம்.

    நான் எனது கணவரின் கால்களை இறுக்கமாக பிடித்துக் கொண்டேன். கூலிப்படையை சேர்ந்த ராஜேஷ், வெற்றிவேலின் கழுத்தை நெரித்து துடிதுடிக்க கொலை செய்தார். அவர்களை யாருக்கும் தெரியாமல் அனுப்பி வைத்தேன். பின்னர் எனது கணவருக்கு உடல்நிலை சரியில்லை என அவரது உறவினர்களிடம் போன் மூலம் தெரிவித்தேன்.

    அவர்கள் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்ற போது இறந்தது தெரியவந்தது. என் மீது சந்தேகம் ஏற்பட்டதால் போலீசில் புகார் தெரிவித்தனர் .

    அப்போது கொள்ளையர்கள் வீட்டிற்கு வந்து தாக்கியதாக கூறி நாடகமாடினேன். ஆனாலும் போலீசார் உண்மையை கண்டுபிடித்து விட்டனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×