என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை ஆஸ்பத்திரிக்கு சிறந்த செவிலியர் சேவைக்கான விருது
    X

    தஞ்சை ஆஸ்பத்திரிக்கு சிறந்த செவிலியர் சேவைக்கான விருது வழங்கப்பட்டது.

    தஞ்சை ஆஸ்பத்திரிக்கு சிறந்த செவிலியர் சேவைக்கான விருது

    • ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
    • டெல்டா பகுதியில் 2-வது முறையாக இந்த விருதை பெறும் ஆஸ்பத்திரி.

    தஞ்சாவூர்:

    ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் கடந்த 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் இந்தியா சுகாதார வழங்குநர்கள் சங்கம் சார்பில் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.

    இந்தியா முழுவதும் இருந்து 400-க்கும் மேற்பட்ட மருத்துவமனைகள் பங்கேற்றன.

    அந்தந்த மருத்தவ மனைகள் ஆற்றிய சேவைகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

    இதில் சிறந்த செவிலியர் சேவைக்கான விருது தஞ்சாவூர் மீனாட்சி மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது. ஏ.எச்.பி.ஐ சார்பில் இந்த விருது வழங்கப்பட்டன.

    டெல்டா பகுதியில் இரண்டாவது முறையாக இந்த விருதை பெறும் முதல் மற்றும் ஒரே மருத்துவமனை மீனாட்சி மருத்துவமனை என்பது குறிப்பிடதக்கது.

    இந்த விருதை மருத்துவமனையின் பொது மேலாளர் டாக்டர் பாலமுருகன், செவிலியர் பிரிவின் கண்காணிப்பாளர் மகேஸ்வரி ஆகியோர் மருத்துவமனையின் சார்பில் பெற்று கொண்டனர்.

    Next Story
    ×