search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றிய தஞ்சை மாணவர் போக்சோவில் கைது
    X

    விக்டர் ஜேம்ஸ் ராஜாவை (முகத்தை துணியால் மூடி இருப்பவர்), சி.பி.ஐ. அதிகாரிகள் கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்த அழைத்து வந்தனர்.

    சிறுமியை ஆபாச வீடியோ எடுத்து இணையதளத்தில் பதிவேற்றிய தஞ்சை மாணவர் போக்சோவில் கைது

    • இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.
    • தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூா் மாவட்டம், அம்மாபேட்டை அருகேயுள்ள பூண்டி தோப்பு தெருவைச் சோ்ந்த ஜெயபால் மகன் விக்டா் ஜேம்ஸ் ராஜா (வயது 35). இவா் மாவட்டத்தில் உள்ள ஒரு கல்லூரியில் முனைவா் பட்டம் பயின்று வருகிறாா்.

    இவரை சி.பி.ஐ துணைக் காவல் கண்காணிப்பாளா் சஞ்சய் கௌதம் தலைமையிலான 11 போ் கொண்ட குழுவினா் கடந்த 15 ஆம் தேதி விசாரிக்க வேண்டும் எனக் கூறி, மத்திய அரசு கல்வி நிறுவன வளாகத்தில் ரகசியமாக வைத்து 2 நாட்களாக விசாரணை நடத்தினா்.

    இவா் பிரதமா் அலுவலகத்துக்கு மின்னஞ்சல் அனுப்பியதால், சி.பி.ஐ அலுவலா்களால் விசாரிக்கப்படுவதாகத் தகவல் பரவியது.

    இந்த சம்பவத்தில் திடீர் திருப்பமாக விக்டர் ஜேம்ஸ் ராஜா, 10 வயது சிறுமியை ஆபாச படம் எடுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்ததாகவும், சர்வதேச கும்பலுடன் ஆபாச படங்களை பகிர்ந்து வந்ததாகவும் இது தொடர்பாக சி.பி.ஐ. அதிகாரிகள் அவரை விசாரணைக்காக அழைத்து வந்தனர் எனவும் தெரிய வந்தது.

    இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா மீது போக்சோ சட்டம், கூட்டு சதி, தகவல் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துதல் ஆகிய பிரிவுகளில் சி.பி.ஐ. அதிகாரிகள் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

    பின்னர் விக்டர் ஜேம்ஸ் ராஜாவை தஞ்சையில் உள்ள போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் சி.பி.ஐ. அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.

    வழக்கை விசாரித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்ட விக்டர் ஜேம்ஸ் ராஜாவை 2 நாட்கள் தஞ்சை கிளை சிறையில் அடைக்குமாறும், வருகிற 20-ந்தேதி(திங்கட்கிழமை) கோர்ட்டில் ஆஜர்படுத்து மாறும் உத்தரவிட்டார்.

    இதையடுத்து விக்டர் ஜேம்ஸ் ராஜா சிறையில் அடைக்கப்பட்டார்.

    Next Story
    ×