search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்
    X

    டேங்கர் லாரி கவிழ்ந்து சாலையில் ஆறாக ஓடிய தண்ணீர்

    • தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
    • விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பூந்தமல்லி:

    திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி சிக்னல் அருகே பூந்தமல்லி நெடுஞ்சாலையில் தனியாருக்கு சொந்தமான தண்ணீர் டேங்கர் லாரி வந்தது. லாரியை டிரைவர் முத்துப்பாண்டியன் ஓட்டினார்.

    அந்த லாரி வேலப்பன்சாவடி பாலத்தின் மீது ஏற முற்பட்ட போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. இதில் தாறுமாறாக ஓடிய லாரி தடுப்பு சுவரில் மோதி சாலையின் நடுவே கவிழ்ந்தது.

    லாரி கீழே கவிழ்ந்ததில் அதில் இருந்த பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் சாலையில் ஆறாக ஓடியது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இந்த விபத்தில் லாரிடிரைவர் முத்துப்பாண்டி லேசான காயத்துடன் உயிர் தப்பினார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு அருகே உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

    தகவல் அறிந்ததும் போக்குவரத்து போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். ராட்சத கிரேன் வரவ ழைக்கப்பட்டு கவிழ்ந்த லாரியை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.

    இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரிடிரைவர் முத்துப்பாண்டியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×