என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
நெல்லையில் சாலைகளை சீரமைக்ககோரி டேங்கர் லாரி டிரைவர்கள் 'திடீர்' போராட்டம்
- தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
- தச்சநல்லூரில் பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
நெல்லை:
தச்சநல்லூர் அருகே உள்ள ஊருடையார்புரத்தில் தனியார் எண்ணை நிறுவன சேமிப்பு கிடங்கு செயல்பட்டு வருகிறது.
இங்கு பெட்ரோல், டீசல்கள் சேமித்து வைக்கப்பட்டு நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய 6 மாவட்டங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது.
தினமும் 138 டேங்கர் லாரிகள் மூலம் பெட்ரோல், டீசல்கள் எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் கூட்டு குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்காக மாநகரின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் தோண்டப்பட்டு பணிகள் நடைபெற்று வருகிறது.
ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக பணிகள் முடிக்கப்படாமல் உள்ளதால் வாகனங்களில் செல்வோர் அவதி அடைந்து வருகிறார்கள். எனவே உடனடியாக அந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என டேங்கர் லாரி டிரைவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை உடனடியாக சீரமைக்க கோரி டிரைவர்கள் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் டேங்கர் லாரிகள் சாலைகளில் வரிசையாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்ததும் மாநகராட்சி உதவிசெயற்பொறியாளர் லெனின் தலைமையிலான அதிகாரிகள் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டிரைவர்கள் கூறும்போது, சாலை பணிகள் நடைபெறுவதால் குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதனால் மாற்றுபாதை வழியாக செல்ல வேண்டி உள்ளது. அப்படி செல்லவேண்டும் என்றால் நகர பகுதி வழியாக செல்லவேண்டும். அப்போது போலீசார் எங்களுக்கு அபராதம் விதித்து வருகிறார்கள். மேலும் நகர்பகுதி வழியாக செல்லும் போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டு சில நேரங்களில் விபத்து அபாயமும் நிகழ்கிறது.
எனவே உடனடியாக ஸ்ரீபுரம்- ஊருடையார்புரம் சாலையை சீரமைக்க வேண்டும் என கூறினர்.
தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்