search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அனுமதியின்றி மது விற்ற டாஸ்மாக் பாருக்கு பூட்டு போட்டு போராட்டம்
    X

    டாஸ்மாக் பார் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்திய காட்சி.

    அனுமதியின்றி மது விற்ற டாஸ்மாக் பாருக்கு பூட்டு போட்டு போராட்டம்

    • சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம்.
    • டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது.

    சேலம்:

    சேலம் பழைய பஸ் நிலையம் சாந்தி தியேட்டர் அருகே உள்ள தமிழக அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடையில் மது வாங்கி குடிமகன்கள் தினசரி குடிப்பது வழக்கம். இந்த டாஸ்மாக் கடையையொட்டி பார் செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் டாஸ்மாக் கடை பூட்டிய பிறகு பாரில் அனுமதியின்றி மது விற்பனை படுஜோ ராக நடைபெற்று வந்த தாக தெரிகிறது. வழக்கம்போல் இன்று காலையிலும் மது விற்பனை செய்யப்படு வதை அறிந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் பார் முன்பு திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    குடிமகன்களுடன் சேர்ந்து அந்த பாருக்கு பூட்டு போட்டு கோஷங்கள் எழுப்பினர். அருகாமை யிலேயே காவல் நிலையம் இருந்தும் மது விற்பனை நடைபெறுவதை போலீசார் தடுக்கவில்லை என்று புகார் தெரிவித்தனர்.

    இதையடுத்து போராட்டக்காரர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு டாஸ்மாக் பார் திறக்கப்பட்டது. இதையடுத்து, கடைக்குள் இருந்த குடிமகன்கள் வெளியே அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Next Story
    ×