என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
காமராஜர் பிறந்தநாளான வருகிற 15-ந் தேதி மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்- சமத்துவ மக்கள் கட்சியினர் கோரிக்கை
- காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
- மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
நெல்லை:
பொதுமக்கள் வாராந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நெல்லை கலெக்டர் அலுவலகத்தில் இன்று கலெக்டர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. இதில் மாவட்டம் முழுவதும் இருந்து ஏராளமானவர்கள் கலந்து கொண்டு கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
சமத்துவ மக்கள் கட்சியினர் மனு
சமத்துவ மக்கள் கட்சியின் நெல்லை மாநகர் மாவட்ட செயலாளர் அழகேசன் தலைமையில் மானூர் தெற்கு ஒன்றியம் செழியன், மாநில செயற்குழு உறுப்பினர் செபஸ்டின், இனைஞர் அணி செயலாளர் முரளி மற்றும் நிர்வாகிகள் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
இந்திய விடுதலை போராட்டம், அகில இந்திய காங்கிரஸ் தலைவர், தமிழ கத்தின் முதல்-அமைச்சர் பதவி என பல்வேறு நிலை களில் மக்களுக்காக பல்வேறு பணிகள், திட்டங் களை தந்தவர் கர்மவீரர் காமராஜர். அவரது பிறந்தநாளை முன்னிட்டு தமிழக அரசு சார்பிலும், பல்வேறு அரசியல் கட்சி சார்பிலும் பெருந்தலைவர் காமராஜர் சிலை மற்றும் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டும் வருகிற 15-ந்தேதி அவரது பிறந்த நாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. காமராஜர் முதல் -அமைச்சராக இருந்த போது பூரணமதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. எனவே பெருந்தலைவர் காமராஜருக்கு மரியாதை செலுத்தும் வகையில் வருகிற 15-ந்தேதி தமிழ கத்தில் மதுக்கடைகளுக்கு விடுமுறை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மாஞ்சோலை தொழிலாளர்கள்
தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநகர் மாவட்ட தலைவர் கண்மணி மாவீரன் தலைமையில் கொடுத்த மனுவில், கடந்த 1999-ம் ஆண்டு ஜூலை 23-ந்தேதி மாஞ்சோலை தோட்ட தொழிலாளர்கள் கூலி உயர்வு கேட்டு போராட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் மூழ்கி 17 பேர் உயிரிழந்தனர்.
அவர்களின் நினைவாக தாமிரபரணி ஆற்றில் புதிதாக கட்டப்பட்டுள்ள பாலதத்திற்கு மாஞ்சாலை போராளிகள் நினைவு பாலம் என பெயரிட வேண்டும். தாமிரபரணி ஆற்றங்கரையில் உயிரிழந்த வர்களுக்கு நினைவு தூண் அமைக்க வேண்டும் என 2012-ம் ஆண்டு முதல் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறோம். எனவே இந்த கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என கூறப்பட்டு உள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்