என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வால்பாறையில் கரடி கடித்து தேயிலை தோட்ட சூப்பர்வைசர் படுகாயம்
    X

    வால்பாறையில் கரடி கடித்து தேயிலை தோட்ட சூப்பர்வைசர் படுகாயம்

    • புஷ்பராஜ் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.
    • புஷ்பராஜூக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    கோவை,

    கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள பன்னிமேட்டை சேர்ந்தவர் புஷ்பராஜ் (வயது 54). இவர் தேயிலை எஸ்டேட்டில் சூப்பர்வைசராக வேலை பார்த்து வருகிறார்.

    சம்பவத்தன்று இவர் பன்னிமேடு 22-வது பீல்டில் வேலை செய்து கொண்டு இருந்தார்.

    அப்போது தேயிலை செடிக்குள் இருந்து திடீரென கரடி வெளியே வந்தது. கரடியை பார்த்து அதிர்ச்சியடைந்த புஷ்பராஜ் உயிரை காப்பாற்றிக்கொள்ள ஓட்டம் பிடித்தார். அப்போது கரடி அவரது இடது முழங்காலுக்கு கீழ் உள்ள பகுதியில் கடித்தது.

    இதில் வலி தாங்க முடியாமல் அவர் சத்தம் போட்டார்.

    இதனை கேட்ட தேயிலை தோட்டத்தில் வேலை செய்தவர்கள் ஓடி வந்து கரடியை விரட்டினர். பின்னர் காயங்களுடன் உயிருக்கு போராடிய புஷ்பராஜை மீட்டு உருளிக்கல்லில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிக்சை அளித்து வருகிறார்கள்.

    இது குறித்து ஷேக்கல்முடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×