என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சூலூர் அருகே வாலிபர் கொலை
- மோட்டார் சைக்கிளில் உரசி சென்றதால் தகராறு ஏற்பட்டது.
- தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார்.
சூலூர்:
கோவை கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் டோல்கேட் அருகே கடந்த 1-ந் தேதி பதுவம்பள்ளியை சேர்ந்த முகுந்த ராஜேஷ் (வயது 22) என்பவர் தனது 4 நண்பர்களுடன் நடந்து சென்றார்.
அப்போது, எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த சேலம் மாவட்டம் மேட்டூரை சேர்ந்த சுபாஷ் (22) என்பவர் அவர்கள் மீது உரசியபடி சென்றதாக தெரிகிறது. இதை முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் தட்டிகேட்டனர். இதனால் 5 பேருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தகராறாக மாறியது.
இதில் ஆத்திரம் அடைந்த முகுந்த ராஜேஷ் மற்றும் அவரது நண்பர்கள் சுபாஷை தாக்கினர். இதனால் கோபத்தில் இருந்த சுபாஷ் மறுநாள் தனது நண்பர்களுடன் முகுந்த ராஜேஷ் தங்கி இருந்த அறைக்கு சென்றார். அங்கு தூங்கி ெகாண்டிருந்த முகுந்த ராஜேஷை அடித்து உதைத்து சென்றனர். இதில் முகுந்த ராஜேசுக்கு தலையில் காயம் ஏற்பட்டது.
பின்னர் முகுந்த ராஜேஷ் தனது நண்பர்களிடம் தலை சுற்றுவதாக கூறியுள்ளார். அவர்கள் முகுந்த ராஜேசின் பெற்றோருக்கு நடந்த சம்பவம் குறித்து தகவல் தெரிவித்தனர். இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் உடனே அன்னூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று முகுந்த ராஜேஷுக்கு சிகிச்சை அளித்தனர்.
அதன்பின்னர் அங்கிருந்து கோவையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அழைத்து வந்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர் அவருக்கு தலையில் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். இதையடுத்து அவரை அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.
இதுகுறித்து முகுந்த ராஜேசின் தந்தை ராசு கருமத்தம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரி ன்பேரில் கருமத்தம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில், தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த முகுந்தராஜேஷ் மேல் சிகிச்சைக்காக கடந்த 16-ந் தேதி கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனும திக்கப்பட்டார். ஆனால் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.
இந்தநிலையில் தலைமறைவாக இருந்த சுபாஷ் சென்னையில் உள்ள கோர்ட்டில் சரண் அடைந்தார். இதையடுத்து அவர் புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்