search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தென்காசி  காசி விஸ்வநாதர் கோவில் தெப்பத் திருவிழா -நாளை நடைபெறுகிறது
    X

    தென்காசி காசி விஸ்வநாதர் கோவில் தெப்பத் திருவிழா -நாளை நடைபெறுகிறது

    • இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை சுவாமி வீதி உலா நிகழ்ச்சியுடன் தொடங்கப்படுகிறது.
    • பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    தென்காசி:

    தென்காசியில் உள்ள பிரசித்தி பெற்ற காசி விஸ்வநாதர் திருக்கோவில் தெப்பத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருவது வழக்கம். இந்த ஆண்டிற்கான திருவிழா நாளை (திங்கட்கிழமை) காலை 10.30 மணி அளவில் சுவாமி வீதி உலா நிகழ்ச்சியுடன் தொடங்கப்படுகிறது. மாலை அபிஷேகம் மற்றும் ஆராதனையும், 6 மணிக்கு மேல் அம்மையப்பர் தெப்பத்திற்கு எழுந்தருளல், 11 சுற்றுகள் தெப்பஉற்சவமும், இரவு 9.30மணிக்கு மேல் சுவாமி ரிஷப வாகன காட்சியில் வீதி உலா நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. காசி விஸ்வநாதர் கோவில் தெப்பத் திருவிழாவிற்கு பக்தர்களின் கூட்டம் அதிகளவில் இருக்கும் என்பதால் தென்காசி மாவட்ட காவல்துறை சார்பில் பாதுகாப்பிற்கு அதிகளவில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    Next Story
    ×