search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தளி கொய்மலர் மகத்துவ மையத்தில்  பன்னாட்டு அளவிலான மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு  -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்
    X

    2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஜெர்பெரா பூ செடி உற்பத்தி செய்யப்பட்டுள்தை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார். அருகில் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யாஆகியோர் உள்ளனர்.

    தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவிலான மகளிருக்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கு -அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்

    • அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஓசூர் வந்தார்.
    • தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    தேன்கனிக்கோட்டை,

    தமிழக வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் நேற்று ஓசூர் வந்தார். அவர் ஓசூர் ஊராட்சி ஒன்றியம், பூனப்பள்ளி மற்றும் தேவகானப்பள்ளி ஆகிய ஊராட்சிகளில் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை சார்பில் நடைபெற்று வரும் விவசாய பணிகள் அவர் ஆய்வு செய்தார்.

    அவருடன் கலெக்டர் ஜெயசந்திரபானுரெட்டி, தோட்டகலைத்துறை இயக்குனர் பிருந்தாதேவி, எம்.எல்.ஏ.க்கள் ஒய்.பிரகாஷ் (ஓசூர்), டி.மதியழகன் (பர்கூர்), டி.ராமச்சந்திரன் (தளி), ஓசூர் மாநகராட்சி மேயர் எஸ்.ஏ.சத்யா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.

    பூனப்பள்ளி ஊராட்சி யில் சின்னப்பா ரெட்டி என்பவர் தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.21 லட்சத்து 42 ஆயிரத்து 500 மதிப்பில் மானியத்தொகை ரூ.8 லட்சத்து 90 ஆயிரத்தில் 2 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவில் பசுமை குடில் அமைத்து ஜெர்பெரா பூ செடி உற்பத்தி செய்யப்பட்டுள்தை பார்வையிட்டு அமைச்சர் ஆய்வு செய்தார்.

    தொடர்ந்து தளி ஒன்றியம் தேவகானப்பள்ளியில் தக்காளி, கேரட் நடவு பணிகளையும், பசுமை குடிலில் ரோஜா பூக்கள் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். பின்னர் தளியில் இந்திய-இஸ்ரேல் வேளாண்மை திட்டத்தின் கீழ் தளி கொய்மலர் மகத்துவ மையத்தில் பன்னாட்டு அளவில் மகளிர்க்கான திறன் மேம்பாட்டு கருத்தரங்கை தூதரக பொது அலுவலர் யார் யசேல், இஸ்ரேல் நாட்டிற்கான தென்இந்திய தூதர் டேம்மி பென் ஹெய்ம் ஆகியோர் முன்னிலையில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தொடங்கி வைத்தார்.

    மேலும், தோட்டக்க லைத்துறை மூலம் பனை மற்றும் தென்னை சார்ந்த தொழில்நுட்ப கருவிகள், கைவினை பொருட்கள், தோட்டக்கலை பயிர்கள் சாகுபடிக்கு தேவையான இயந்திரங்கள் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிரிடப்பட்ட பல்வேறு வகையான மலர்களால் அமைக்கப்பட்ட கண்காட்சியை தொடங்கி வைத்து, பார்வையிட்டார்.

    இந்த நிகழ்ச்சியில் தோட்டக்கலைத்துறை இணை இயக்குநர் பூபதி, வேளாண்மைத்துறை இணை இயக்குநர் முகமது அஸ்லாம், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலவலர்கள் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×