search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை
    X

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகில் வாகன சோதனையில் ஈடுபட்ட போலீசார்.

    தஞ்சை மாவட்டத்தில் போலீசார் தீவிர வாகன சோதனை

    • அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர்.
    • சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா?

    தஞ்சாவூா்:

    திருவண்ணாமலையில் ஒரே நாளில் 4 ஏ.டி.எம். எந்திரங்களை நூதன உடைத்து ரூ.75 லட்சத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்ற தப்பி ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    கொள்ளையர்களை பிடிக்க திருவண்ணாமலை மட்டுமின்றி தமிழ்நாடு முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.

    அந்தந்த மாவட்டங்களில் போலீசார் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

    அதன்படி தஞ்சையில் போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் உத்தரவுபடி ரெயிலடி, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் உள்ளிட்ட உள்ளிட்ட பல்வேறு இடங்களில் போலீசாரின் அதிரடி வாகன சோதனை நடந்து வருகிறது.

    தஞ்சை பழைய பஸ் நிலையம் அருகே மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையில் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

    அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களையும் வழிமறித்து நிறுத்தி சோதனை செய்தனர். உடைமைகளை சோதனை இட்டு அதில் சந்தேகப்படும்படி பணம் கொண்டு செல்கிறார்களா என சோதனையிட்டனர். எங்கிருந்து வருகிறீர்கள் ? எங்கு செல்கிறீர்கள் என தீவிர விசாரணை நடத்தி அனுப்பி வைத்தனர்.

    தொடர்ந்து வாகன சோதனை நடந்து வருகிறது. இதேபோல் மாவட்டத்தில் உள்ள அற்புதாபுரம், புதுக்குடி உள்ளிட்ட 8 எல்லைகளிலும் செக்போஸ்ட் அமைத்து தீவிர கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    வெளி மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது.

    48-க்கும் மேற்பட்ட இடங்களில் கண்காணிப்பு பணி நடந்து வருகிறது.

    Next Story
    ×