என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 349 மி.மீ. மழை கொட்டியது
- தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
- பட்டுக்கோட்டையில் அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.
தஞ்சாவூா்:
தஞ்சை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் காணப்பட்டது. சுட்டெரித்த வெயிலால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
இரவிலும் வெப்பத்தின் தாக்கம் நீடித்ததால் தூங்க முடியாமல் சிரமப்பட்டனர்.இந்த நிலையில் தஞ்சையில் நேற்று மாலை திடீரென குளிர்ந்த காற்றுடன் மழை பெய்யத் தொடங்கியது.
இடி மின்னலுடன் கனமழை கொட்டியது. இதேபோல் பட்டுக்கோட்டையில் கனமழை பொழிந்தது.
மாவட்டத்திலே அதிகபட்சமாக இங்கு தான் 48 மி.மீ. மழை பதிவானது.
இதேபோல் வல்லம், குருங்குளம், ஒரத்தநாடு, அதிராம்பட்டினம் , மதுக்கூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்தது. தஞ்சை மாவட்டத்தில் ஒரே நாளில் 349.70 மி.மீ. மழை பெய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை 9 மணி வரை முடிவடைந்த மழையின் அளவு மி.மீ.யில் வருமாறு:-
பட்டுக்கோட்டை-48,
அதிராம்பட்டினம்-43.50,
மதுக்கூர்-42,
தஞ்சாவூர்-35,
திருக்காட்டுப்பள்ளி-27.60,
வெட்டிக்காடு -23.80,
குருங்குளம் -23.