என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மானியத்தில் எந்திரங்கள் பெற விண்ணப்பிக்கலாம்-கலெக்டர் தகவல்
- மதிப்பு கூட்டும் எந்திரங்கள் மானியங்களில் பெற விவசாயிகள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.
- மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,
வேளாண்மை பொறியியல் துறையின் மூலமாக தஞ்சாவூர் மாவட்டத்தில் அறுவடைக்குப் பின் சார்பு பொருட்களை மதிப்புக்கூட்டும் எந்திரங்கள் பரவலாக்கம் திட்டத்தின் கீழ் பொது பிரிவினர் மற்றும் பட்டியல் இனத்தவர்களுக்கு 40 சதவீதம் பின்னேற்பு மானியத்தில் கருவிகள் வழங்கப்பட உள்ளன.
இந்த திட்டத்தின் கீழ் மரவகை மற்றும் இரும்பு உருளைகளை கொண்ட எண்ணெய் பிழியும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.94,683, தென்னை மட்டை உரிக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.61,600, வாழை மட்டை நார் உரிக்கும் எந்திரங்களுக்கு ரூ.52,000, சிறிய வகை நெல் அரைக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.17,000, நெல் உமி நீக்கும் எந்திரங்களுக்கு அதிகபட்சமாக ரூ.44,000 பின்னேற்பு மானியமாக விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.
விவசாயிகள் இத்திட்டத்தில் பயனடைய ஆதார் கார்டு, வங்கி கணக்கு புத்தகம் முதல் பக்க நகல், பாஸ்போர்ட் போட்டோ, சிட்டா அடங்கல், மும்முனை மின்சாதன வசதியுடன் கூடிய 10 அடி நீளம் 10 அடி அகலம் உள்ள இடம் உள்ளதற்கான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
மேற்காணும் எந்திரங்கள் தேவைப்படும் தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவையாறு, பூதலூர் மற்றும் திருவோணம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் தஞ்சாவூர் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், எண்.15, கிருஷ்ணா நகர், மனோஜிபட்டி ரோடு, மருத்துவக் கல்லூரி அஞ்சல், தஞ்சாவூர்-613004 என்ற முகவரியிலும்,
கும்பகோணம், அம்மாபேட்டை, பாபநாசம், திருவிடைமருதூர், திருப்பனந்தாள் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் கும்பகோணம் உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், தொழில்பேட்டை அருகில், திருபுவனம், திருவிடைமருதூர் தாலுகா, கும்பகோணம்-612103 என்ற முகவரியிலும்,
பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி, சேதுபாவாசத்திரம் வட்டாரங்களை சேர்ந்த விவசாயிகள் பட்டுக்கோட்டை உபகோட்ட உதவி செயற்பொறியாளர் அலுவலகம், ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகம், பாளையம், பட்டுக்கோட்டை-614601 என்ற முகவரியிலும் தொடர்பு கொண்டு பயன்பெறலாம்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்