என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அஞ்சுகிராமம் அருகே தற்கொலை செய்து கொண்ட 3 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
- இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை
- உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை
நாகர்கோவில் : அஞ்சுகிராமம் அருகே அழகப்பபுரம் இந்திரா நகர் பகுதியை சேர்ந்தவர் ஏசுதாசன். வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தார். இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவரது மனைவி அனிதா (45). இவர்களது மகள்கள் சகாய திவ்யா (19), சகாய பூஜா மவுலிகா (16). சகாய திவ்யா அந்த பகுதியில் உள்ள என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 2-ம் ஆண்டும், சகாய பூஜா மவுலிகா 11-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று காலை இவரது வீட்டின் கதவு நீண்ட நேரம் ஆகியும் திறக்கப்படவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் அஞ்சுகிராமம் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தபோது அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகா ஆகியோர் தூக்கில் தொங்கினார்கள்.
இதையடுத்து அவர்களது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரி பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தற்கொலை செய்து கொண்ட அனிதா எழுதி வைத்திருந்த கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினார்கள். அதில் தனக்கு உடல் நலம் சரியில்லாததால் தற்கொலை முடிவு எடுத்துக்கொள்வதாகவும் எனது மகள்களுக்கு பாதுகாப்பு இல்லாமல் அனாதையாகி விடுவார்கள். எனவே அவர்களுடன் சேர்ந்து தற்கொலை செய்வதாக கூறியிருந்தார்.
போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில் தற்கொலை செய்து கொண்ட 3 பேர் உடலும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.
பிரேத பரிசோதனைக்கு பிறகு அனிதா, சகாய திவ்யா, சகாய பூஜா மவுலிகாவின் உடலை அவரது உறவினர்கள் பெற்றுக்கொண்டனர். 3 பேர் தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது அனிதா கடந்த சில நாட்களாகவே உடல்நலம் பாதிக்கப்பட்டு இருந்துள்ளார்.
பல மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றும் அவருக்கு நோய் குணமாகவில்லை. இதனால் தாம் இறந்து விடுவோம் என்று அச்சத்தில் இருந்து உள்ளார். இது குறித்து தனது மகள்களிடம் அனிதா தெரிவித்துள்ளார். தான் இறந்துவிட்டால் உங்களை யாரும் பார்க்க மாட்டார்கள். எனவே குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளலாம் என்ற முடிவை கூறியுள்ளார். இதையடுத்து குழந்தைகளும் தாய் இறந்த பிறகு நம்மால் எப்படி வாழ முடியும் என்று நினைத்து அவர்களும் தாயின் முடிவுக்கு ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து தான் 3 பேரும் ஒரே கம்பியில் தூக்குபோட்டு தற்கொலை செய்துள்ளனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்