என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
அகில இந்திய பாரா வாலிபால் போட்டி லோகோவை கலெக்டர் வெளியிட்டார்
- பிப்ரவரி 3-ம் தேதி தொடங்கி, 5-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
- 22 மாநிலங்களிலிருந்து 36 அணிகளை சேர்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் விளையாடவுள்ளனர்.
தஞ்சாவூர்:
தஞ்சாவூர் பெரியார் மணியம்மை பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கப்படவுள்ளது.
இது தொடர்பான இலச்சி னையை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டார்.
அப்போது அவர் கூறியதாவது :-
இந்திய பாரா வாலிபால் சங்கம், தமிழ்நாடு பாரா வாலி சங்கம், தஞ்சாவூர் மாவட்ட பாரா வாலி சங்கம் ஆகியவை சார்பிலும், மாவட்ட நிர்வாகம், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, தஞ்சாவூர் மாநகராட்சியுடன் இணைந்து அகில இந்திய அளவிலான மாற்றுத்திறனாளிகள் பங்கேற்கும் 11 ஆவது அகில இந்திய பாரா வாலிபால் போட்டி தஞ்சாவூர் பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழக உள் விளையாட்டரங்கத்தில் பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி, 5 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போட்டியில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளம், கர்நாடகம், தெலுங்கானா, ஆந்திரம், உத்ரகாண்ட், ஜார்கண்ட், பிகார், ராஜஸ்தான், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா உள்பட 22 மாநிலங்க ளிலிருந்து 36 அணிகளைச் சார்ந்த சுமார் 450 விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்று விளையாடவுள்ளனர்.இப்போட்டியிலிருந்து வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு, உலக அளவில் நடைபெறும் பாரா ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்ளவுள்ளனர்.
இந்தப் போட்டியைப் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பிப்ரவரி 3 ஆம் தேதி தொடங்கி வைக்கிறார். நிறைவு நாளில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை துறை அமைச்சர் கீதாஜீவன் கலந்து கொண்டு வெற்றிக் கோப்பையையும், பரிசுத் தொகையையும் வழங்கவுள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.முன்னதாக அவர், போட்டிக்கான லோகோவை வெளியிட்டார்.
அப்போது, மாநகராட்சி ஆணையர் சரவணகுமார், இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மண்டல மேலாளர் சங்கீதா, தமிழ்நாடு பாரா வாலி சங்க மாநிலத் தலைவர் மக்கள் ராஜன், மாவட்ட தடகள சங்கத் தலைவர் கிருஷ்ணசாமி வாண்டையார், மாவட்ட பாரா வாலி சங்க தலைவர் ராமநாத துளசி அய்யா வாண்டையார், மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல்உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்