search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையில் தோன்றிய பள்ளத்தால் பொது மக்கள் அவதி
    X

    சாலையில் தோன்றிய பள்ளத்தால் பொது மக்கள் அவதி

    • எடையூர் இ.சி.ஆர். சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள் அவதியடைந்துள்ளனர்.
    • மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    பல்வேறு பகுதிகளில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது, முத்துப்பேட்டை அருகே எடையூர் இ.சி.ஆர். சாலையில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி எதிரே சாலை ஏற்பட்ட பள்ளத்தால் பொது மக்கள், வாகன ஓட்டிகள் அவதியடைந்துள்ளனர்.

    இந்த சாலை திருத்துறைப்பூண்டி- பட்டுக்கோட்டை பிரதான சாலையாகும்.

    இந்த சாலையில் கனரக வாகனங்களும் அரசு பேருந்துகளும் தனியார் வாகனங்களும் அதிக அளவில் செல்லும்.

    இந்த சாலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலத்தின் நடுவே போடப்பட்ட சிமெண்ட் குழாய் உடைந்து பள்ளம் உருவானது.

    பின்னர் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஒரு குழாயை கொண்டு வந்து பாலத்தில் வைத்து மேற் பரப்பில் மணலை நிரப்பி சென்று விட்டனர்.

    இந்நிலையில் கடந்த 2 நாட்களாக பெய்து வரும் மழையால் பாலத்தின் சாலையில் மணல் உள்வாங்கி பள்ளம் ஏற்பட்டது. இதனால் அப்பகுதியை சேர்ந்த வாகன ஓட்டிகள் மற்றும் பொது மக்கள் அவதியடைந்து வருகின்றனர்.

    திடீரென ஏற்பட்ட பள்ளத்தில் விபத்து நடப்பதற்கு முன்னர் அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் புதிய பாலத்தையும் கட்டி தரவேண்டும் என அப்பகுதி பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது பற்றி அப்பகுதிளை சேர்ந்த நடையழகன் கூறியதாவது:-

    இந்த பாலம் சுமார் 50 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டது பாசன வாய்க்காலின் நடுவே ஏற்பட்ட10 அடி ஆழத்திற்கும் 2 அடி அகலத்திற்கும் ஏற்பட்ட பள்ளத்தில் வாகனங்கள் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர் நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் விரைந்து வந்து போக்குவரத்தை மாற்றி அமைத்து பாலத்தின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை இடித்து அகற்றி விட்டு புதிய பாலம் கட்டி தரவேண்டும் அதுவரையில் மாற்று வழியில் போக்குவரத்து இயக்க நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

    Next Story
    ×