என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ெரயில் மறியல் போராட்டம்: போலீசாருடன் வாக்குவாதம்-பரபரப்பு
- ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர்.
- கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கடலூர்:
மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் அதை தடுக்க தவறிய மத்திய அரசையும், மணிப்பூர் மாநில அரசையும் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் ெரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என அறிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர், கடலூர் அண்ணா மேம்பாலம் அருகில் மாவட்ட துணை செயலாளர் குளோப் தலைமையிலும் நகர செயலாளர் நாகராஜ், நகர துணை செயலாளர் பாக்கியம், முன்னாள் மாவட்ட குழு உறுப்பினர் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையிலும் நிர்வாகிகள் திரண்டனர். பின்னர் ஊர்வலமாக கண்டன கோஷம் எழுப்பிய படி திருப்பாதிரிப்புலியூர் ரெயில் நிலையத்திற்கு திரண்டு வந்தனர். அங்கு கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு பிரபு தலைமையில் குவிந்திருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி ெரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடக்கூடாது என கூறினர்.
இதனால் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கும் போலீசாருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து கடலூர் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்திற்கு வந்த சோழன் எக்ஸ்பிரஸ் ெரயிலை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் தண்டவாளத்தில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் மத்திய அரசை கண்டித்தும், மணிப்பூர் அரசை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். இதனால் திருப்பாதிரிப்புலியூர் ெரயில் நிலையத்தில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது. அப்போது அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினரிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அனைவரையும் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர்.