என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
உடன்குடியில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் ஏற்பாட்டில் தார்சாலை அமைக்கும் பணி தொடக்கம்
- குலசேகரன்பட்டினம் செல்லும் சாலை வாகனங்கள் செல்ல முடியாத நிலையில் மோசமாக இருந்தது.
- கவுன்சிலர் சபானா தமிம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார்.
உடன்குடி:
உடன்குடி பேரூராட்சி 17-வது வார்டு பகுதியில் புதுமனை சமத்துவ நகர் வழியாக குலசேகரன்பட்டினம் செல்லும் அவசர வழிச்சாலை பல ஆண்டுகளாக பழுதாகி குண்டும் குழியுமாக இருந்தது. இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலைமையில் மோசமாக இருந்தது. இந்த நிலையில் இந்த ரோடை புதுப்பிக்க இப்பகுதியில் உள்ள மக்களும் பல்வேறு சமூகநல அமைப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது இப்பகுதி பேரூராட்சி கவுன்சிலர் சபானா தமிம், அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து இது சம்மந்தமாக கோரிக்கை மனு கொடுத்தார். இக் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட அமைச்சர், உடனடியாக இந்த சாலையை புதுப்பிக்க உத்தரவிட்டார். அதன்படி உடன்குடி பேரூராட்சி தலைவர் ஹூமை ரா அஸ்ஸாப் கல்லாசி, செயல் அலுவலர் பாபு ஆலோசனைபடி சாலை போடும் பணி தொடங்கியது. சுமார் ஐந்து வருட கோரிக்கை நிறைவேறியதாக இப்பகுதியில் உள்ள மக்கள் அமைச்சருக்கு பாராட்டும் நன்றியும் தெரிவித்தனர்.