search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மக்கள் நீதிமன்றம் மூலம் பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் இணைந்தனர்
    X

    மக்கள் நீதிமன்றம் மூலம் இணைந்த தம்பதியினரை படத்பதில் காணலாம்

    மக்கள் நீதிமன்றம் மூலம் பிரிந்து வாழ்ந்த தம்பதியினர் இணைந்தனர்

    • 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.
    • தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர்.

    பல்லடம் :

    பல்லடம் வட்ட சட்ட பணிகள் ஆணைக்குழு சார்பில் பல்லடத்தில் மக்கள் நீதிமன்றம் பல்லடம் சார்பு நீதிமன்ற நீதிபதி சந்தான கிருஷ்ணசாமி, குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சித்ரா ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.

    இதில் மோட்டார் வாகன விபத்து வழக்கு, காசோலை வழக்கு, சொத்து வழக்கு, குடும்ப வழக்கு, உள்ளிட்ட 159 வழக்குகள் எடுக்கப்பட்டு அதில் 76 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது .தீர்வு தொகையாக ரூ.70,88,492 வழங்கப்பட்டது. இதில் பல்லடத்தை சேர்ந்த இளம் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு மேலாக பிரிந்து வாழ்ந்து வந்தனர். குடும்ப வன்முறை குறித்த வழக்கில் தம்பதியினரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

    இதில் இருவரும் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்ததையடுத்து வழக்கு முடித்து வைக்கப்பட்டு நீதிபதிகள் முன்னிலையில் கருத்து வேறுபாடால் பிரிந்த இளம் தம்பதிகள் மீண்டும் குடும்ப வாழ்வில் இணைந்தனர்.

    Next Story
    ×